Nitya KarmAs
உபாகர்மா
“உபாகர்மா” उपाकर्मा என்கிறவார்த்தையை “அத்யாயோபகர்மா” अध्यायोपाकर्मा என்ற வார்த்தை மூலம் நன்கு புரிந்து கொள்ளமுடியும். அத்யாயோபகர்மா” अध्यायोपाकर्मा என்றால் வேத பாட துவக்கத்தின் தயாரிப்பு என்று பொருள். ஒவ்வொரு வருடத்திலும் வேதம் குறிப்பிட்ட மாதத்தில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்து உள்ளது.
யாஞவல்கிய ஸ்மிருதி ஆசார அத்யாயத்தில் அத்யாயம் 1 வசனம் 142
अध्यायानामुपाकर्म श्रावण्यां श्रवणॆन वा|
हस्तेनौषधिभावे वा पञ्चम्यां श्रावणस्य तु||
அத்யாயானாமுபாகர்ம ஶ்ராவண்யாம் ஶ்ரவணேன வா|
ஹஸ்தேனௌஷதிபாவே வா பஞ்சம்யாம் ஶ்ராவணஸ்ய து||
ஸ்ரவண மாதத்தில் ஸ்ரவண நக்ஷத்திரத்தில் வேதம் கற்றுக்கொள்ள துவங்க வேண்டும். ஆவணி மாதத்தில் மருத்துவ மூலிகை வளரும் நேரம் (பௌர்ணமி) தினத்திலோ அல்லது ஹஸ்த நக்ஷத்திரத்திலோ வேதாரம்பம் செய்யலாம்.
வசனம் 143
सौरमासस्य रॊहिण्यामष्टकायामथापि वा|
जलान्तॆच्छन्दसां कुर्य्यात्तदुत्सर्ग विधिवद्बहि:||
ஸௌரமாஸஸ்ய ரோஹிண்யாமஷ்டகாயாமதாபி வா|
ஜலான்தேச்சன்தஸாம் குர்ய்யாத்ததுத்ஸர்கவிதிவத்பஹி:||
வருட வேத பாடம் தை மாதத்தில் ரோஹிணி நக்ஷத்திரத்திலோ அல்லது அஷ்டமி திதியிலோ ஊரின் வெளியில் தண்ணீர் அருகில் நிறைவு செய்தல் வேண்டும்.
தித்திரி முனிவர் வாக்கியம் ( நிர்ணய சிந்து)
तैष्याम् पौर्णमास्यां रॊहिण्यां वा विरमॆत्
தைஶ்யாம் பௌர்ணமாஸ்யாம் ரோஹினிண்யாம் வா விரமேத்
வருட நிறைவு தை மாதத்தில் பௌர்ணமியிலோ ரோஹிணியிலோ முடிக்கலாம்.
வேத பாடம் குரு முகமாக வருடத்தில் 6 மாத காலம் (சில ரிஷிகள் 4.5 மாதம்) கற்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளார்கள். வேதாரம்ப தினம் உபாகர்ம தினமாக அனுஷ்டிக்கபடுகிறது.
அன்றய தினத்தில்
1. யஞோபவிதம் (பூணல் மாற்றும் சடங்கு)
2. தேவ ரிஷி பித்ரு தர்பணங்கள்
3. வேதாரம்பம்
மறுதினத்தில் காயத்ரி ஜபம் / ஹோமம் 1008 இந்த புண்ணிய தினத்தில் நடத்த படுகிறது.
பல முனிவர்களின் கூற்றின் படி இன்று ஒரு முழுமையான தினம்.
இன்று வேதபாடசாலை அரையிறுதி முடிந்து புது அமர்வு துவங்கும் தினம் .
குறிப்பு: சில உட்பிரிவில் திதியை பிரதானமாக வைத்தும் சில உட்பிரிவில் நட்சத்திரத்தை பிரதானமாக வைத்தும் முக்கிய தினத்தை குறிப்பது வழக்கமாக உள்ளது. இங்கு பிரபலமாக ஆவணி அவிட்டம் என்று மக்கள் அழைக்க காரணம் பெரும்பாலும் ஆவணி பௌர்ணமியில் அவிட்ட நட்சத்திரம் அமைவதால் அவ்விதம் அழைக்கும் பழக்கம் வந்ததாக தெரிகிறது.
எந்த இருபிறப்பாளனுக்கு (பிரஹ்மச்சாரி,கிருகஸ்தன் ) உபநயன சம்ஸ்க்காரம் நடந்துள்ளதோ அவர்களுக்கு உபாகர்மா ஒவ்வொரு வருடமும் அவசியம்.
1 அவரவர்கள் வீட்டில் வாத்யாரை வரவழைத்து தகுந்த மரியாதை செய்து அவர் வழிகாட்டுதலின் படி இந்த உபாகர்மத்தை செய்யலாம்.
2 அது முடியவில்லை என்றால் வாத்யார் சொல்லும் இடத்திற்க்கு சென்று எல்லாருடனும் சேர்ந்து இந்த உபாகர்மத்தை செய்யலாம்.
3 அதுவும் முடியவில்லை என்றால் இந்த இணையதளத்தில் “என் உபாகர்மா” பகுதியில் தங்கள் உட்பிரிவுக்கு ஏற்ப குறிப்பிட்டுள்ளபடி இந்த உபாகர்மத்தை செய்யலாம்.
1 அவரவர்கள் வீட்டில் வாத்யாரை வரவழைத்து தகுந்த மரியாதை செய்து அவர் வழிகாட்டுதலின் படி இந்த உபாகர்மத்தை செய்யலாம்.
2 அது முடியவில்லை என்றால் வாத்யார் சொல்லும் இடத்திற்க்கு சென்று எல்லாருடனும் சேர்ந்து இந்த உபாகர்மத்தை செய்யலாம்.
3 அதுவும் முடியவில்லை என்றால் இந்த இணையதளத்தில் “என் உபாகர்மா” பகுதியில் தங்கள் உட்பிரிவுக்கு ஏற்ப குறிப்பிட்டுள்ளபடி இந்த உபாகர்மத்தை செய்யலாம்.
இந்த இணையதளத்தில் “என் உபாகர்மா” பகுதியில் தங்கள் உட்பிரிவுக்கு ஏற்ப குறிப்பிட்டுள்ளபடி இந்த உபாகர்மத்தை செய்யலாம். உங்கள் சுயவிவரத்தை முறைப்படி உள்ளிடவும். அது உங்கள் உட்பிரிவுக்கு ஏற்றவாறு உங்கள் உபாகர்மாவை அளிக்கும்.
க்ரமத்தை கீழே கோடிட்டு காட்டியுள்ளோம்
1 நித்ய கர்மா (ஸந்த்யாவந்தனம்,சமீதாதானம்,அக்னிஹோத்ரம்…)
2 ப்ராயாசித்த ஜபம். – குறிப்பிடாத காலத்தில் வேத பாடம் கற்க நேர்ந்ததினால்.
3 மாத்யாநிகம்
4 யஞோபவித தாரணம்
5 காண்டரிஷி தர்ப்பணம் / தேவ தர்ப்பணம் / பித்ரு தர்ப்பணம்
6. வேதாரம்பம்
தேவையான வஸ்துக்கள் :
பவித்ரம்,
யஞோபவிதம் (பூணல்)
பிரஹ்மசாரிகளுக்கு – मौञ्जी மௌஞ்சி , अजिन அஜின दण्ड தண்டம்
அரிசி
எள்
தண்ணீர்
தாம்பாளம்
நாள்
வேத வழிப்படி பல ரிஷிகள் (ஹேமாத்ரி,யாஞவல்க்யர்,கோபிலர்,தித்ரி, கார்க்யர் மற்றும் பலர்) பல நாட்களை குறித்துள்ளனர்
1 யஜுர் வேதம் – ஆவணி பௌர்ணமி திதி மிகுதியாக இருக்கும் நாள்.
2 ஸாம வேதம் – ஆவணி ஹஸ்த நட்சத்திரம்
3 ரிக் வேதம் – ஆவணி திருவோண நட்சத்திரம்
4 அதர்வ வேதம் – ஆவணி பௌர்ணமி திதி விடியலில் வரும் நாள்.
நேரம்
காலை 8.00 – 8.30 மணிக்குள்
நித்ய கர்மா குளித்து (ஸந்த்யாவந்தனம்,சமீதாதானம்,அக்னிஹோத்ரம்…)
ப்ராயாசித்த ஜபம்
பிறகு மழித்து குளித்து 11.30 தருவாயில் மாத்யாநிகம்,பகவத் ஆராதனை,பிரஹ்ம யஞம் செய்த பிறகு உபாகர்மா செய்ய துவங்க வேண்டும்.
1பெற்றோர்கள் இறந்த வருடம் உபாகர்மா கிடையாது. ஆனால் காயத்ரி ஜபம் உண்டு.
2 எந்த ஒரு காரணத்தினாலோ உபாகர்மா குறித்த நாளில் செய்ய தவறினால் தை மாதத்திற்குள் வரும் பௌர்ணமியில் உபாகர்மா செய்துகொள்ளலாம்.
3 உபாகர்மா ஸ்ராத்த தினத்தில் வருமானால் முதலில் உபாகர்மாவை முடித்துவிட்டு பிறகு ஸ்ராத்தம் செய்ய வேண்டும். இது ஏனெனில் உபாகர்மா ரிஷி கார்யம். அதை முடித்து விட்டு தான் பித்ரு கார்யம் செய்ய வேண்டும் . (குறிப்பு : சில உட்பிரிவில் இதில் மாறுதல் தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட உரை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. வாசகர்கள் அவரவர்கள் வாத்யாரை கேட்டு தெரிந்து கொள்ளவும்)
4 உபாகர்மா தினத்தன்று கிரஹணம், ஸங்க்ரமணம் வருமெனில் அன்று உபாகர்மா செய்ய கூடாது. (குறிப்பு: இது முதல் உபாகர்மா செய்யும் பிரஹ்மசாரிக்கு மட்டும் பொருந்தும் என்று சில உட்பிரிவு பாடம் சொல்லுகிறது) தை மாதத்திற்குள் வரும் பௌர்ணமியில் உபாகர்மா செய்துகொள்ளலாம்.
5 முதல் உபாகர்மா செய்யும் பிரஹ்மசாரிக்கு உபாகர்மா தினத்தன்று கிரஹணம்,ஸங்க்ரமணம் வருமெனில் ஆஷாட பௌர்ணமி தினத்தன்றோ பாத்ராபத பௌர்ணமியன்றோ உபாகர்மா செய்து கொள்ளவேண்டும்.