DHARMA SPEAKS

தர்மத்தின் குரல்

குருவே சரணம்!
ஸம்ஸ்காரம் வேதம் கூறும் வழியில் வாழ்க்கையை நடத்த உதவுகிறது. . வேதத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை அனுஷ்டித்தால்நாம் நம் மனம், உடல் மற்றும் ஆத்மாவில் முழுமை அடைய முடியும். நம் முன்னோர்கள் காண்பித்து கொடுத்த இந்த ஸம்ஸ்காரங்கள் நம்மை சம்சார சாகரத்தை கடக்க, உதவும் தோணியாக அமைந்துள்ளது. இந்த வேத வழி வாழ்க்கையை நம் முன்னோர்கள் செய்தும், செய்வித்தும் வாழ்ந்தும் காட்டி வந்தார்கள்.

ஆனால், இந்த வாழ்க்கைமுறை இன்றும் இந்த பொருளாதார நடைமுறையின் நடுவில் இருக்கிறதா? அல்லது இது ஒரு புராண கால சிந்தனையின் வெளிப்பாடா? இந்த அவசர யுகத்தில் இது சாத்தியமா? தெரியவில்லை. எங்களிடம் இதை மெய்ப்பிப்பதற்கோ அல்லது பொய்ப்பிப்பதற்கோஉண்டான விவரங்கள் / ஆவணங்கள் இல்லை. ஆங்காங்கே சில சடங்கின் ( பூணல், திருமணம்) நிகழ்வுகள் இதன் நிழலை இன்றும் பிரதிபலிக்கின்றன.

அவ்விதம் நடக்கும் சடங்குகளும், அதன் உண்மை நிலை மாறி,எல்லாவற்றின் சீரழிவு இதனையும் தாக்கி, பகட்டின் பரிமாணம் மிகுதியாகவும், மெய் முறையில் பாதிப்பும் அதன் தாக்கம் செய் முறையிலும் ஏற்பட்டும் நாம் நமது வேர்களை தொலைத்தோம்.வந்த பாதை மறந்து, மேல்கொண்டு போகும் பாதை தெரியாமல் பரிதவித்து கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர்.

எல்லாம் “கலிகால்ம்”. இப்படித்தான் நடக்கும் என்பதையும் நாம் முன்னோர்கள் எழுதிவிட்டுத்தான் சென்றார்கள், அதனால் இதெல்லாம் தற்கால நடைமுறைக்கு உதவாது. மேலும் விஞ்ஞானம் வளர வளர மெய்ஞானம் மறந்து போகும். இது கலி புருஷனின் தீ நாக்கின் விளைவு. இது மேன்மேலும் மிகவும் மோசமாகமாக தான் இருக்கும். “ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது” என்று வாதிப்பவர்களின் பின்னால் எங்களால் மறைந்து கொள்ள முடியவில்லை.
இன்றும் சில மகாபுருஷர்கள் இந்த வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்படும் பொழுது,நம் மனதில் ஆர்வம் துளிர்விடுகின்றது. நலிந்த ஸம்ஸ்ககாரத்தை மீண்டும் எழுப்பி உயிர்பிக்கஆசை ஏற்படுகிறது.இந்த வலையின் நோக்கமும் இதுதான்.
இப்படிப்பட்ட மகாபுருஷர்களை படம் பிடித்து, அவர்களின் நடைமுறை சாத்தியக்கூறுகளை உரமாக்கி மேலும் இந்த சம்ஸ்காரம் உண்மை முறையில் வளர நாங்கள் எடுக்கும் முதல் முயற்சி இது.

ஸம்ஸ்காரம் எல்லா இந்துக்களுக்கும் பொதுவென்றாலும் அவர்களின் வர்ணம், குலம், ஸம்ப்ரதாயத்தில் மாற்றம் காண்கிறோம். அவற்றை அவரவர்கள் சேர்ந்த குலம்,கோத்ரம், ஸம்ப்ரதாயத்தின்படி , மற்றொரு முலாம் பூசாமல் உங்களுக்கு தருவது எங்களின் நோக்கமாகும். இதனால் இந்த வலை பல மொழி(எங்களால் முடிந்த) சார்ந்த வலை. அதை வரும் சந்ததியினருக்கு எடுத்து செல்வது எங்கள் ஆசை.

இந்த முயற்சி மிகப்பெரிய முயற்சி. சில தனிப்பட்ட நபர்களால் மட்டும் நடத்த முடியாது. ஆனாலும் கடற்கரையில் சிபியை பொறுக்கும் சிறுவர்களை போல் நாங்கள் துடங்கிவிட்டோம். ஆழ்கடலில் முத்துக்குளிக்க வேண்டும்.

ஸம்ஸ்காரத்தை போல் இதுவும் ஒரு பயணம். முகவரியை மறந்தோம். முழுமையாய் தொலைந்தோம். இனி தேடலை தொடர்கிறோம். நீங்களும் வாருங்கள், ஸம்ஸ்காரத்தை நடைமுறைப்படுத்த இந்த முயற்சியில் பங்கு கொள்ளுங்கள்.இதுவே நாம் முன்னோர்களுக்கு செலுத்தும் காணிக்கையாகும்.
நீங்களும் எங்களுடன் ஸம்ஸ்காரத்தை ஆஸ்ரயிக்க விரும்பினீர்களானால்
இந்த வலையை தொடர்புக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்ளுவோம்.
உங்கள் நேரத்திற்கு நன்றி.