About Us

எங்களை பற்றி

ஸ்ரீ குருவே சரணம்!

ஸம்ஸ்காரம் வேத வழி வாழ்க்கை வாழ வழி வகுக்கிறது.  வேத வழி வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை ஆகும்.  இப்படி ஒரு வாழ்க்கை , நாம் நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை முழுமையாக பேணிக்காத்தால் தான் அமையும்.  ஸம்ஸ்காரம் என்ற விலைமதிக்கமுடியாத வேத ரகஸ்யத்தை நம் முன்னோர்கள் நன்கு பேணி காத்தும் போதித்தும் வாழ்ந்து காட்டியும் வந்தார்கள்.

ஸம்ஸ்காரம் என்றால் என்ன?

ஸம்ஸ்காரம் என்பது வேதத்தில் குறிப்பிட்டுள்ள வேத வேள்வி முறைகளாகும்.  “ஸம்ஸ்” என்றால் “நல்ல”; “காரம்” என்றால் “உருவாக்குதல்”.  ஆதாவாது நம்மை நல்ல முறையில் முழுமையாக உருவாக்க உதவும் வேத வேள்வி.  இந்த விலைமதிப்பற்ற ஸம்ஸ்காரம் மனிதனின் பிறப்பிலிருந்த்து இறப்பு வரை உடல், மனம் மற்றும் ஆன்மாவை (உள்ளும் புறமும்) சுத்த படுத்தி மனிதனை பிரஹ்மத்தை அடைய ஒரு ஏணிபோல் இருக்கின்றன.

நாம் ஏன் ஸம்ஸ்காரன்களை அனுஷ்டிக்கவேண்டும்?

  1. அகமும் புறமும் தூய்மை படுத்தி , உன்னத பண்புகளோடு வாழ்வேண்டும்
  2. வருங்கால சந்ததியினருக்கு தூய்மை உணர்வை அளிக்க முடியும்.
  3. கர்மாவின் பிடியிலிருந்து விடுபெற உதவும் வழி.
  4. உலக நன்மைக்காக வேண்டும் மனபக்குவத்தை வளர்க்க உதவும்.

குறிப்பாக வேதத்தில் இது செய்தால் வரும் பலனை விட, செய்யாவிட்டால் வரும் பாபத்தை இன்று நாம் நடைமுறையில் பார்த்தும், கேட்டும் அனுபவித்து வருகிறோம்.

இந்த வலையின் நோக்கம் என்ன?

  1. முதலில் ஸம்ஸ்காரம் பற்றிய தகவல் களஞ்சியம் உருவாக்க

நாங்கள் எடுக்கும் முயற்சி இது.  ஆஸ்தீகர்களுக்கும் ஸம்ஸ்காரங்களை முறையே அனுஷ்டித்து வரும் சான்றோர்களுக்கும் ஒரு பாலமாக இந்த வஅலையின் அவா

  1. ஸம்ஸ்காரம் அதன் கிளை, உட்கிளை மேலும் ஸம்ப்ரதாயத்தின் மூலம் சிறு வேறுபாடுகளை காண்கிறோம். அதன் வேறுபாடுகளின் விஷேஷத்தையும் அதை மாற்றாமலும் அந்த கிளை உட்கிளை ஸம்ப்ரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எடுத்து செல்லும் முயற்சி.
  2. மேலும் வேத சான்றோர்களிடம் சம்ஸ்க்காரம் பற்றிய தகவல் பகிர்ந்து / அறிந்து கொள்ளும் தளமாகவும் இந்த வலையை வுபயோகிக்க நாங்கள் எடுக்கும் முயற்சி இது.

இந்த ஆர்வமுள்ள முயற்சியில் உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.

நன்றி!

தொடர்புக்கான மின்னஞ்சல் ஐடி – atmaraksha@gmail.com