Nitya KarmAs
காயத்ரீ ஜபம்
மந்திரத்திலேயே காய்த்ரி மந்த்ரம் சக்தி வாய்ந்த தலையாய மந்த்ரம். “காயந்தம் த்ராயதே இதி” என விரிவின் விளக்கம் மந்திரம் ஜபிப்பவரை காக்கும் ஆகும். இந்த மந்திரம் குரு முகமாக உபநயனத்தின் சமயம் ஒவ்வொரு சிஷ்யனுக்கும் கிடைக்கப்பெறும் மந்திரம் ஆகும். இந்த மந்திரம் மூன்று வேதத்தின் (ரிக்,யஜுர்,ஸாம ) ஸாராம்சம் என்று கூறினால் அது மிகையாகாது. அதனாலேயே அதற்கு “திரிபாத காயத்ரி” என்று பெயர். காயத்ரி வேதத்திற்க்கு அன்னை ஆதலால் வேதமாதா என்று அழைக்க படுகிறாள். விடியலில் காயத்ரியாகவும்,பகலில் சாவித்ரியாகவும், ஸாயத்தில் ஸரஸ்வதியாகவும் அழைக்கபடுகிறாள்.
ஷாங்க ரிஷி ஸ்மிரிதி அத்யாயம் 11 – காயத்ரி ஜப விதி வர்ணனை
गायत्री चैव जननी गायत्री पापनाशिनी ।
गायत्रीयास्तु परं नास्ति दिवि चॆह च पावनम ॥
காயத்ரீ சைவ ஜனனீ காயத்ரீ பாபநாஷினீ|
காயத்ரீயாஸ்து பரம் நாஸ்தி திவி சேஹ ச பாவனம்||
அன்னை காயத்ரி அனைத்து பாபங்களையும் போக்குகிறாள். பூலோகத்திலும் பரலோகத்திலும் காயத்ரியைவிட வல்ல புனிதம் வேறு ஏதும் இல்லை.
இது 24 அக்ஷரங்களை (3 பாதம் 8 அக்ஷரம்) கொண்டது. பிரணவத்தில் துவங்கி 3 வியாக்ருதியை (பூ,பூவ,சுவ) அழைத்து இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இது ரிக் வேத சம்ஹிதையில் (3.62.10) காணப்படுகிறது.
“ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவ்ஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்.”
நாம் தெய்வீக உண்மையையும் ஆன்மீக சுடரொளியையும் நோக்கி தியானம் செய்வோம்.
உஷன முனிவர் அவர் ஸ்ம்ரீதியில் 3.46
गायत्रीमप्यधीयीत गत्वारण्यं समाहित: ।
सहस्रपरमां दॆवीं शतमध्यां दशापराम् ॥
காயத்ரீமப்யதீயீத கத்வாரண்யம் ஸமாஹித: |
ஸஹஸ்ர பரமாம் தேவீம் ஷத மத்யாம் தஷா பராம் ||
காயத்ரி மந்திரத்தை 1000 முறை உச்சாடனம் செய்வது மிகவும் தெய்வீகம்,100 முறை மத்யமம் மேலும் 10 முறை மிகவும் குறைவு.
தேவி பாகவத புராணம் ஸ்கந்தம் 9 அத்யாயம் 26 வரிகள் 14 – 17
सकृज्जपश्च गायत्र्या: पापं दिनभवं हरॆत्।
दशवारं जपॆनैव नश्यॆत्पापं दिवानिशम्॥
शतवारं जपश्चैव पापं मासार्जितं हरॆत् ।
सहस्रधा जपश्चैव कल्मशं वत्सरार्जितम् ॥
लक्षॊ जन्मकृतं पापं दशलक्षॊन्यजन्मजम्
सर्वजन्मकृतं पापं शतलक्षाद्विनश्यति ॥
करॊति मुक्ति विप्राणां जपॊ दशगुणस्तत: ।
ஸக்ருஜ்ஜபஷ்ச காயத்ர்யா: பாபம் தினபவம் ஹரேத்|
தஷவாரம் ஜபேனைவ நஷயேத்பாபம் திவானிஷம்||
ஷதவாரம் ஜபஷ்சைவ பாபம் மாஸார்ஜிதம் ஹரேத்|
ஸஹஸ்ரதா ஜபஷ்சைவ கல்மஷம் வத்ஸரார்ஜிதம்||
லக்ஷோ ஜன்மக்ருதம் பாபம் தஷலக்ஷோன்யஜன்மஜம்
ஸர்வஜன்மக்ருதம் பாபம் ஷதலக்ஷாத்விநஷ்யதி||
கரோதி முக்தி விப்ராணாம் ஜபோ தஷகுணஸ்தத: |
ஒரு முறை காயத்ரி ஜபம் ஜபித்தால் ஒரு தினம் செய்த பாபத்தை அழிக்கும்.
10 ஜபம் இரவு பகல் பாபத்தை அழிக்கும்.
100 ஜபம் 1 மாத பாபத்தை அழிக்கும்.
1000 ஜபம் 1 வருட பாபத்தை அழிக்கும்.
1 லக்ஷம் இந்த ஜன்ம பாபத்தை அழிக்கும்.
10 லக்ஷம் முன் ஜன்ம பாபத்தை அழிக்கும்.
100 லக்ஷம் எல்லா ஜன்ம பாபாத்தை அழிக்கும்.
மேலே சொன்னதில் 10 மடங்கு பிறப்பு இறப்பை அழிக்கும்.
உபநயன சம்ஸ்க்காரம் ஆன) பிரஹ்மச்சாரியும்,கிரஹஸ்தனும் காயத்ரி ஜபம் ஜபிக்கலாம் . ஹோம முறையிலும் செய்யலாம்.
- மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
உஷன முனிவர் – ஸ்மிருதி – 3.47
गायत्रीं वै जपॆन्नित्यं जपश्च त्रि: प्रकीर्तित:
गायत्रीन्चैव वॆदांश्च तुलया तुलयन् प्रभु:
காயத்ரீம் வை ஜபேன்நித்யம் ஜபஷ்ச த்ரி: ப்ரகீர்தித:
காயத்ரீன்சைவ வேதாம்ஷ்ச துலயா துலயன் ப்ரபு:
காயத்ரியை மூன்று வேளையும் ஜபிக்க வேண்டும். காயத்ரியின் மேன்மையை பிரமன் காயத்ரியை தராசின் ஒரு பக்கமும் மூன்று வேதத்தை அடுத்த பக்கமும் வைத்து சராசரியை காண்பித்து கொடுக்கிறான்.
- விஷேஷமான காயத்ரி ஜபம் ஆவணி பிரதமை திதியில் அனுஷ்டிக்க படுகிறது. இன்று ஒரு விஷேஷ சங்கல்பத்தின் மூலம் 1008 காயத்ரி ஜபம் ஜபிக்க படுகிறது. இந்த ஜபம் தவறாக சொன்னதிதற்க்காகவும்,சொல்லாமல் இருந்ததிர்க்காகவும்,ப்ராயசித்தமாக ஜபிக்கபடுகிறது. எல்லா வேதக்காரர்களுக்கும் இந்த சுபதினம் ஒரு பொது தினம்.
ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம், ப்ரஷ்ன 1, படல 9, கண்டிகா 1
श्रावण्यां वा पौर्णमास्यां तिलभक्ष उपॊष्य वा श्वॊ भूतॆ महानदमुदकम् उपस्पृश्य सावित्र्या समित्सहस्रम् आदध्याद् जपॆद्वा॥१॥
ஷிராவண பௌர்ணமீ தினததன்று எள்ளு/எல்லில் செய்யப்பட பதார்தத்தை சாப்பிட்டு உபவாசம் இருந்து அடுத்த நாள் 1000 சமித்துக்களால் காயத்ரீ ஹோமம் அல்லது காயத்ரீ ஜபம் செய்யவும்.
பிருஹத்யோகி யாக்யவல்க்ய ஸ்மிருதி 7.143
ग्रुहॆत्वॆकगुणं प्रॊक्तं नद्यां तु द्विगुणं स्मृतम् ।
गवां गॊष्ठॆ दशगुणं अग्न्यगारॆ शताधिकम् ॥
सिद्धिक्षॆत्रेषु तीर्थॆशु दॆवतायाश्च सन्निधौ ।
सहस्रशतकॊटिस्स्यात् अनन्तं विष्णुसन्निधौ.
க்ருஹேத்வேககுணம் ப்ரோக்தம் நத்யாம் து த்விகுணம் ஸ்ம்ருதம்|
கவாம் கோஷ்டே தஷகுணம் அக்ன்யகாரே ஷதாதிகம்||
ஸித்திக்ஷேத்ரெஷு தீர்தேஷு தேவதாயாஷ்ச ஸன்னிதௌ|
ஸஹஸ்ரஷதகோடிஸ்ஸ்யாத் அநந்தம் விஷ்ணுஸன்னிதௌ. ||
நதிக்கரையிலோ / குளக்கரையிலோ ஜபிக்கும் ஜபம் வீட்டில் ஜபிப்பதை காட்டிலும் இரு மடங்கு பலன் தரும்.
பசு மாட்டு தொழுவத்தில் ஜபிக்கும் ஜபம் வீட்டில் ஜபிப்பதை காட்டிலும் 10 மடங்கு பலன் தரும்.
யாக சாலையில் ஜபிக்கும் ஜபம் வீட்டில் ஜபிப்பதை காட்டிலும் 100 மடங்கு பலன் தரும்.
புண்ணிய க்ஷேத்திரத்தில் ஜபிக்கும் ஜபம் வீட்டில் ஜபிப்பதை காட்டிலும் கோடி மடங்கு பலன் தரும்.
விஷ்ணு கோவில் கர்ப கிருகத்தில் ஜபிக்கும் ஜபம் வீட்டில் ஜபிப்பதை காட்டிலும் கோடி மடங்கு மேலே பலன் தரும்.
மேலே கிடைக்கும் இடம் மிகவும் உகந்தது. இல்லையெனில் வசிக்கும் வீட்டில் ஜபிக்கவும்.
போதாயன முனிவரின் ஸ்மிருதி 2.5.22 :
प्रणवॊ व्याहृतय: सावित्री चॆत्यॆतॆ पञ्च ।
ब्रह्म यज्ञा: अहरहब्राह्मणं किल्बिशात् पावयन्तॆ ॥
ப்ரணவோ வ்யாஹ்ருதய: ஸாவித்ரீ சேத்யேதே பஞ்ச|
ப்ரஹ்ம யக்யா: அஹரஹ ப்ராஹ்மணம் கில்பிஷாத் பாவயன்தே||
காயத்ரி மந்த்ரம் 5 இடத்தில் நிறுத்தி நிதானமாக ஜபிக்கவேண்டும்
- பிரணவம்
- 3 வியாக்ருதி
- தத் சவிதுர் வரேண்யம்
- பர்கோ தேவஸ்ய தீமஹீ
- தியோ யோ ந: ப்ரசோதயாத்.
உஷண முனிவரின் ஸ்மிருதி 3.53 :
यॊधीतॆ हन्यहन्यॆताम् गायत्रीं वॆदमातरम् ।
विज्ञायार्थं ब्रह्मचारी स याति परमां गतिम्॥
யோதீதே ஹன்யஹன்யேதாம் காயத்ரீம் வேதமாதரம்|
விக்யாயார்தம் ப்ரஹ்மசாரீ ஸ யாதி பரமாம் கதிம்||
எந்த ஒரு பிரஹ்மசாரி காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் அறிந்து முழுமையாக ஜபிக்கிரானோ அவன் முழு இலக்கை அடைகிறான்.
ஷங்க ஸ்மிருதி அத்தியாயம் 11 வரி 19
हुता दॆवि विशॆषण सर्वकाम प्रदायनी |
सर्वपापक्षयकरी वनस्थभक्तवत्ला ||
ஹுதா தேவி விஷேஷண ஸர்வகாம ப்ரதாயனீ |
ஸர்வபாபக்ஷயகரீ வனஸ்த பக்தவத்ஸலா ||
ஹோமத்தில் காயத்ரி தேவிக்கு அர்பணிக்க படும் காயத்ரி மந்திரம் சகல பாபங்களையும் போக்கி எல்லா வரமளிக்க வல்லது.
காயத்ரி ஜபம் மேலும் காயத்ரி ஹோமம் வரைமுறை “என் காயத்ரி ஜபம்” பக்கத்தில் உள்ளது.