Nitya KarmAs
ஸமிதாதானம்
ஸமித் என்பது புரச/அரச மர குச்சி. “ஆதானம்” என்றால் வைத்தல் என்று பொருள்.
ஸமிதாதானம் என்பது ஸமித் குச்சியால் அக்னியில் நடத்தபடும் ஒரு நித்ய வேள்வி. இதை தினமும் இருமுறை (காலை,மாலை) ஒவ்வொரு பிரஹ்மசாரியும் ஸந்த்யாவந்தனம் செய்தவுடன் செய்தல் வேண்டும். பிரஹ்மசாரியின் வழிபாட்டில் அக்னி பகவானும் சூரிய பகவானும் பிரதான பகுதியாகும்.
விஷ்ணு புராணம் – பிரஹ்மசாரி வர்ண – காண்டம் 3 – அத்யாயம் 9 – பகுதி 9 – ஔர்வ முனிவர் கூறுமாறு அமைந்துள்ளது
उभॆ सन्ध्यॆ रविं भूप तथैवाग्निं समाहित: ।
उपतिष्ठॆत्तदा कुर्याद्गुरॊरप्यभिवादनम्॥
உபே ஸந்த்யே ரவிம் பூப ததைவாக்னிம் ஸமாஹித: |
உபதிஷ்டேத்ததா குர்யாத்குரோரப்யபிவாதனம்||
ஒரு பிரஹ்மசாரி ஸந்த்யா காலத்தில் பக்தியுடன் அக்னி தேவதையையும் சூர்ய தேவதையையும் வணங்குதல் அவஸ்யம். மேலும் குருவுக்கு அபிவாதனம் செய்தலும் அவஸ்யம்.
உபநயனம் செய்விக்கபட்ட பிரஹ்மசாரி ஸமிதாதானம் செய்யலாம்.
ஒரு பிரஹ்மசாரி காலை, மாலை ஸந்த்யாவந்தனம் செய்தவுடன் இந்த வேள்வியை செய்ய வேண்டும்.
உபநயனத்தின் போது காயத்ரீ மந்த்ர உபதேசம் பெறுவதுடன் இரண்டு கடமை செய்ய ஒரு பிரஹ்மசாரி கடமை பட்டிருக்கிறான். ஒன்று 3 வேளை ஸந்த்யாவந்தனம் செய்வதும் இரண்டு ஸமிதாதானம் செய்வதும். இந்த இரண்டு கடமையும் அவன் புத்தியை தீட்டுவதுடன் அவனை ஒரு நல்ல ஒருங்கிணைந்த வாழ்க்கைக்கு அடி நாட்டுகிறது. சூரிய தேவதையும் அக்னி தேவதையும் அவனுக்கு புத்தி சாதுர்யத்தையும்,வளர்ச்சியும்,நல்ல சந்ததியும்,பலத்தையும் வீர்யத்தையும் புகட்டுகிறார்கள். அவர்கள் அவனுக்கு காவலர்களாகவும் சாக்ஷிகளாகவும் வழி நடத்துகிறார்கள். அவன் மனத்தில் கெட்ட எண்ணம் வளராமல் காப்பாற்றுகிறார்கள். இதை தொடர்ந்து செய்வதினால் அவனுக்கு அளவற்ற சக்தியும் தூய்மையான உள்ளமும் கிடைக்க பெறுகிறான்.
“என் ஸமிதாதானம்” பகுதியை கிளிக் செய்து இதை முழுமையாக அறிந்துகொள்ளவும்.
இதற்க்கு தேவையான உங்கள் தகவலை அங்கு அளித்து அதன் மூலம் உங்கள் தனிப்பட்ட ஸமிதாதானம் பெற்றுக்கொள்ளவும்.
தேவையான பொருட்கள்
- ஸமித் – 17 குச்சி
- ஹோம குண்டம்
- நெய்
- பசு விரட்டி
- தீப்பட்டி
- சூடம்
- தண்ணீர்
தேவைப்படும் விஷயங்கள்:
1. சமித் குச்சிகள் (சுமார் 17) சமிதி
2. ஹோம் குண்டம் எம்.எம்
3. சில நெய் உணவுகள்
4. இனம் (மாடு சாணம்), इन्दनम्
5. பாக்ஸ் பாக்ஸ் அக்னீபி
6. காம்பார் கர்ஃபர்
7. தண்ணீர் ஜால்கள்
பிரஹ்மசாரி வாழ்க்கைக்கு அடிக்கல் ஸந்த்யாவந்தனமும் ஸமிதாதானமும்.
இதை திறம்பட செய்து வந்தால் ஒருவனுக்கு அகஒளியையும், இந்த்ரியத்தையும், பிரஜயையும் தேவதை தர காத்திருக்கிறது. முயன்று பாருங்கள்.