Skip to content

Tuesday, 5th August 2025

Lost your password?

Please enter your username or email address. You will receive a link to reset your password via email.

Register
Forgot
Apple Store Google Play
  • தொடர்பு கொள்ள
  • நாள்காட்டி

Thought for the day

“Deva PitruKaryAbhyAm naPramadhitavyam” – Deva KarmAs and PitrukarmAs should never be stopped
Taittriopanishad – SheekshAvaLI

  • தொடர்பு கொள்ள
  • நாள்காட்டி
  • முகப்பு
  • ஸம்ஸ்காரம்
  • நித்ய கர்மா
  • இயற்கையுடன் ஆன்மீகம்
  • வேத வாழ்வில் எண்கள்
  • எங்களை பற்றி
  • தர்மத்தின் குரல்

Nitya KarmAs

1. abhivAdanam
2. ஆசமனம்
3. ப்ராணாயாமம்
4. ஸந்த்யாவந்தனம்
5. ஸமிதாதானம்
6. ப்ரஹ்ம யஜ்ஞம்
7. pitru tarpanam
8. UPAKARMA
9. பரிஷேசனம்
10.
11. sankalpam

abhivAdanam

abhivAdanam


  • என்ன?

  • யார்?

  • ஏன்?

  • எப்பொழுது?

  • எப்படி?

  • விலக்குகள்?

  • தர்மத்தின் குரல்

  • My abhivAdanam

அபிவாதனம்

பெரியோர்களையும் சான்றோர்களையும் தான் வந்த கோத்ர வழி கூறி மரியாதையுடன் வணங்கும் முறை க்கு அபிவாதனம் என்று பெயர்.

“உபநயனம்” (ஸம்ஸ்காரம்-3) ஆனவர்கள் அபி⁴வாத³னம் செய்ய ஆரம்பிக்கலாம்.

இது நமது பாரம்பரிய கலாசார முறை. பெரியோர்களின் ஆசியை பெற இந்த முறை மிகவும் உகந்ததாகும். இதை நாம் நன்றியுணர்ச்சியுடன் செய்தல் அவசியம்.

மனுஸ்மிரிதி 2.120 கூறுகிறது:

ऊर्ध्वम् प्राणा ह्युत्क्रामन्ति यून: स्थविर आयाति ।

प्रत्युत्थानम् अभिवादाभ्याम् पुनस् तान् प्रतिपध्यतॆ ॥

ஊர்த்⁴வம் ப்ராணா ஹ்யுத்கிராமந்தி யூன: ஸ்த²விர ஆயாதி |

ப்ரத்ய்த்தா²னம் அபி⁴வாதாப்⁴யாம் புனஸ் தான் பிரதிபத்³யதே ||

ஒரு பெரியவர் அருகில் வந்தால் நமது ப்ராணன் உடலை விட்டு மேல்நோக்கி எழுந்திருக்கும்,  அதனால் நாம் எழுந்து இருந்து அவரை வணங்கினால் தான்,  நமது ப்ராணனை திரும்ப பெறமுடியும்.

அபிவாதனத்தை எப்பொழுதெல்லாம் பெரியோர்களை நமஸ்கரிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் செய்தல் வேண்டும்.

அபி4வாதனம் :-

  1. எப்பொழுதெல்லாம் நாம் பெரியவர்களை சந்திக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் நமது ஆசனத்தில் இருந்து எழுந்துருக்கவேண்டும். (பிரத்யுத்தா2னம்)
  2. பிறகு அவரை விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். (எத்தனை முறை என்பதை தங்கள் வழி பெரியோர்களை கேட்டு தெரிந்து கொள்ளவும்)

அவரை நேர்முகமாக நமஸ்கரிக்கவேண்டும். கிழக்கு முகம் பார்த்து நமஸ்கரிப்பது சிறந்தது. (பாதோபஸங்க்ர:)

  1. தன் இரண்டு காதையும் உள்ளங்கையால் மூடிக்கொண்டு குனிந்து அபி4வாதனம் சொல்ல வேண்டும்.

பிரத்யபிவாதனம்:-

பெரியோர்கள் நாம் கூறும் அபிவாதனத்தைகூர்ந்து கேட்டு நாம் வந்த வழியை புரிந்துக்கொண்டு நம்மை உகந்த முறையில் நல் வார்த்தை கூறி ஆசீர்வதிப்பார்கள்.

 

  1. அர்ச்சாமூர்திக்களுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும், சன்யாசிகளுக்கும் அபிவாதனம் கிடையாது.
  2. அபிவாதனம் எப்பொழுதும் தனி நபருக்குத்தான் செய்யவேண்டும். கூட்டமாக இருக்கும் பொழுது பெரியோர்களுக்கு செய்தல் கூடாது.
  3. தாயைத்தவிர மற்ற பெண்களுக்கு அப4வாதனம் செய்தல் கூடாது. தாய்க்கு சமமான குருவின் மனைவிக்கு அபிவாதனம் செய்யலாம்.
  4. கோவில்களில் அபிவாதனம் செய்தல் கூடாது.

பெரியோர்கள் மனமுதிர்ச்சியின் ஒரு எடுத்துக்காட்டு. அதை அவர்கள் தங்கள் ஒழுக்கத்தினாலும் விடாமுயற்ச்சியினாலும் இந்த கலியிலும்,அவர்களின் தர்மத்தை விடாமல் கடைப்பிடித்து காட்டி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு எதிர்பார்பில்லாத அன்பும்,பரிவும்,சரியான புத்திமதியும் தந்து நம்மை சரியாக வழி நடத்த வல்லவர்கள். அவர்களின் ஆசீர்வாதம் வெறும் வார்த்தையன்று. நம் மன அலைகளை சீர்படுத்த வல்ல ஒலி அலைகள். இந்த ஆத்மார்த்தமான ஆசீர்வாதம் பெறுவது ஒரு அனுபவம். முயன்று பாருங்கள்.

Please Login, in order to view your abhivAdanam. If not registered, then Register Here
a aa,A i ee,I  
अ आ इ ई  
u U,oo E ai  
उ ऊ ए ऐ  
O ou,ow,au Ru aha  
ओ औ ऋ :  
k kha g gha nga
क ख ग घ ङ
ch Ch ja jha ngya
च छ ज झ ञ
T Th D DH N
ट ठ ड ढ ण
t th d dh n
त थ द ध न
p f b bh m
प फ ब भ म
y r l v  
य र ल व  
sh SH s h  
श ष स ह  
kSha tra gya shra gM/gum
क्ष त्र ज्ञ श्र

óè

wpDiscuz