List of Samskaaras
ஸ்மார்த்த கர்மா
பஞ்ச மஹா யக்ஞம் - 5
ஸப்த பாக யக்ஞம் - 7
ச்ரௌத கர்மா
ஸப்த ஸோம யக்ஞம் - 7
ஸப்த ஹவிர் யக்ஞ - 7
பும்ஸவனம்
“பும்ஸுவனம் पुंसुवनं ” என்றால் “ஒரு ஆண் குழந்தையை முதல் கொண்டு வருதல் என்பதாகும் ”.
” पुमान्यॆन सूयतेतत् पुंसुवनं नाम कर्म “
எந்த ஒரு கர்மாவின் மூலம் மனைவியானவள் ஆண் சிசுவை முன் கொண்டு வருகிறாளோ அதற்கு பும்ஸுவனம் என்று பெயர்.
இதை பும்சவனம் என்றும் கூறலாம் पुंसवनं
இந்த சம்ஸ்க்காரம் கணவனால் தன் மனைவிக்கு செய்யப்படும் கர்மாவாகும். இதை அவரவர்கள் வீட்டு வாத்யார் முறையாக துவக்கி வைப்பார்.
சுக்ல யஜுர்வேதத்தை சேர்ந்த பாரஸ்கரா முனிவர் அவரது
கிருஹ்ய சூத்திரத்தில் காண்ட 1, கண்டிகா 14 பின்வருமாறு கூறுகிறார்
“मासि द्वितीये तृतीये वा यदह: पुंसॊ नक्षत्रॆण चन्द्रमा युक्तस्स्यात्”
சிசு அசைவதற்க்கு முன்பே பும்ஸுவனம் செய்தல் தகும். அதாவது இரண்டு அல்லது மூன்றாவது மாதத்தில் பௌர்ணமி ஆண் நட்சத்திரத்துடன் கூடிய நாட்களில் செய்தல் சிறந்தது.
கிருஷ்ண யஜுர் வேதத்தை சேர்ந்த ஆபஸ்தம்ப முனிவர் பின்வருமாறு கூறுகிறார்.
“ पुंसवनम् व्यक्तॆ गर्भे तिष्यॆण”
“puMsavanam vyaktE garbhe tiShyENa”
கர்பம் தெரிய வந்த வுடன் “திஷ்ய” எனும் (புஷ்யம் எனும் கூறலாம்) எனும் விண்மீன் தினத்தன்று பும்ஸுவனம் செய்யலாம்.
கருவுற்று எத்தனை மாதத்தில்?
கர்பம் தெரிந்தவுடன் சிசு அசையும் நாளில் அதாவது 2,3 அல்லது நான்காம் மாதத்தில் பும்ஸுவன சம்ஸ்க்காரம் செய்யலாம்.
எந்த நட்சத்திரம்?
புஷ்ய நக்ஷத்ரம் மங்களகரமான பும்ஸுவனத்திர்க்கு மிகவும் ஏற்ற நக்ஷத்திரமாகும். மேலும் புனர்வசு ,ஹஸ்தம், மூலம், சம்ஸ்க்காரத்திற்க்கு ஏற்ற நட்சத்திரம்.
எவ்வளவு தடவை?
இதில் கருத்து வேறுபாட்டை காண்கிறோம். சில பள்ளிகள் இதை முதல் கருத்தரிப்பு சமயத்தில் செய்ய வேண்டும் என்றும் வேறும் சிலர் இதை ஒவொரு கருத்தரிப்பு சமயத்தில் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். நாளடைவில் நடைமுறையில் இது முதல் கருத்தரிப்பு சமயத்தில் நடைபெறுகிறது. ஆபஸ்தம்ப முனிவர் பும்ஸுவன சம்ஸ்க்காரம் ஆண் குழந்தை வேண்டுமென்றால் மட்டும் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
பும்ஸுவன சம்ஸ்காரம் அவரவர் வீட்டில் செய்வது சால சிறந்தது.
தங்கள் வீட்டின் வாத்யாரிடம் முறைப்படி விக்ஞாபித்து நடத்தி கொடுக்க சொல்லி பிரார்திக்கவும். சாஸ்திரத்தின் அடிப்படையில் கீழே கோடிட்டு காட்டியுள்ளோம். கிருஹ்ய சூத்திரத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம். ஆபத்ஸ்தம்ப சூத்திரத்தில் அடிப்படையில் கோடிட்டு தர முயற்சி செய்துள்ளோம்.
- 1. நித்யகர்மா नित्यकर्मा – தினமும் செய்யபட வேண்டிய ஸந்த்யாவந்தனமும் ஔபாசனமும் கர்தா முறைப்படி செய்து முடிக்க வேண்டியது.
- அனுக்ஞா अनुज्ञा – அனுக்ஞா என்பது வேத முறைப்படி அனுமதி பெரும் சடங்காகும். வெற்றிலை தாம்பூலத்துடன் தக்ஷிணையும் சேர்த்து பிராமணர்களுக்கு கொடுத்து வணங்கி இந்த சம்ஸ்க்காரத்தை ஆரம்பிக்க பிரார்திக்கும் முறைக்கு அனுக்ஞா என்று பெயர்.
- உதக சாந்தி ஜபம் उदकशन्ति – ‘உதகம்’ என்றால் தண்ணீர். இதற்கு கலசத்தில் தண்ணீர் நிரப்பி வருண பகவானை வேண்டி அந்த கலசத்தில் ஆவாஹிக்க பிரார்திக்கும் வழி. நன்கு விஷயம் அறிந்த பிராஹ்மணர்களால் நடத்தப்படும் ஜபம். பிறகு அந்த மந்திரிக்கப்பட்ட தண்ணீரை கணவன் மீது தெளித்தும் மனைவி மீது முழுவதும் அந்த புனித நீரை வார்த்தும் இதை நிறைவு செய்வர். பின்பு வருண பகவானின் வழி அனுப்பும் சடங்கை செய்து நிறைவு செய்வர்.
- பிரதிசாரபந்தம்प्रतिसरबन्धम् – “பிரதிசாரம்” என்பது மந்தரித்த கயிற்றை கணவன் மனைவி மணிகட்டில் கெட்ட சக்தியிருந்து காக்க கட்டபடும் காப்பாகும். இங்கே பிராஹ்மணர்கள் சூக்தங்கள் மூலம் காய்த்ரி, அக்னி, ஆப:, ஹிரண்ய, விஷ்ணு, லக்ஷ்மி முதலிய தேவதைகளை வேண்டி அந்த மந்திர கயிற்றை கணவனின் வலது மணிகட்டிலும் மனைவியின் இடது மணிகட்டிலும் விஷேஷமான பிறுகத்சாமா மந்திரத்தின் மூலம் கயிற்றை கட்டுவார்கள்.
- சங்கல்பம் सन्कल्पम् – இது பும்ஸுவன கர்மா செய்வதற்க்கு எடுக்கும் ஒருவகை உறுதிமொழி. கடவுள் / தேவதை ஆசீர்வாதத்துடன் இந்த நாள், இந்த காலம், இந்த சமயம், இந்த இடம், இந்த கோத்ரம், இந்த நக்ஷத்திரம், இந்த ராசி என்ற முறைப்படி சதிபதிகள் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் உறுதி மொழி.
- பும்ஸுவன ஹோம:पुम्सवन हॊम: இந்த ஹோமம் ஒருவரின் ஔபாசன அக்னி மூலம் நடத்த படுகிறது.
- “ஆஜ்ய பாகம்” आज्य भागंஅல்லது “முகாந்தம்” என்பது அக்னி மற்றும் சோம தேவதைகளை ப்ரீதி பண்ணுவதர்க்காக செய்ய படுகிறது. அக்னி தேவர்களின் முகம் என்றும் நாம் அளிக்கும் ஆஹூதிகளை தேவர்களுக்கு எடுத்து செல்பவர் என்று ஐதீகம். இந்த கர்மாவில் “நெய் आज्य” and “பாத்ரம் पात्र ” சுத்திகரிக்கபட்டு சரியான திசையில் வைக்கபட்டு குறிப்பிட்ட மந்திரம் கூறி யாகம் செய்வர். இதனுடன் கற்பிணி பெண்ணிற்க்கு புதிய சேலை மேலும் அல முளைப்பயிர், குழவி மற்றும் இதர உருப்படியும் சுத்திகரிக்க படுகிறது. இந்த கர்மாவிர்க்கு பாத்ர சாதனம் पात्र साधनम् என்று பெயர், பிறகு ஆஜ்ய ஹோமம் செய்ய படுகிறது. பிறகு பின்வரும் 8 பும்ஸுவன மந்திரத்தை முறைப்படி ஓதி அக்னி பகவானுக்கு ஆஹூதி அளிப்பர்.
வீட்டு வாத்யார் பின் வரும் காரியத்தை செய்து கொடுப்பார்
முதல் நான்கு மந்திரம் கிருஷ்ண யஜுர் வேத சம்ஹிதை காண்டம் 3, பிரஷ்ணம் 3, அனுவாகம் 11
- . kÉÉýiÉÉ SþSÉiÉÑlÉÉã UýÌrÉqÉÏzÉÉþlÉÉã eÉaÉþiÉýxmÉÌiÉþ: | xÉ lÉþ: mÉÔýhÉãïlÉþ uÉÉuÉlÉiÉç|
- kÉÉýiÉÉ mÉëýeÉÉrÉÉþ EýiÉ UÉýrÉç DþzÉã kÉÉýiÉãSÇ ÌuɵÉÇý pÉÑuÉþlÉgeÉeÉÉlÉ | kÉÉýiÉÉ mÉÑý§ÉÇ rÉeÉþqÉÉlÉÉrÉý SÉiÉÉý | iÉxqÉÉþ E WûýurÉÇ bÉ×ýiÉ uÉþ̲kÉãqÉ |
- kÉÉýiÉÉ SþkÉÉiÉÑ lÉÉã UýÌrÉÇ mÉëÉcÉÏÿgeÉÏýuÉÉiÉÑýqÉÎZwÉþiÉÉqÉç | uÉýrÉlSãýuÉxrÉþ kÉÏqÉÌWû xÉÑqÉýÌiÉóèxÉýirÉUÉþkÉxÉ: |
- kÉÉýiÉÉ SþSÉiÉÑ SÉýzÉÑwÉãý uÉxÉÔþÌlÉ mÉëýeÉÉMüÉþqÉÉrÉ qÉÏýRÒûwÉãþ SÒUÉãýhÉã | iÉxqÉæþ SåýuÉÉ AýqÉ×iÉÉýxxÉðuurÉþrÉliÉÉýuÉçÆÌuɵÉãþ SãýuÉÉxÉÉãý AÌSþÌiÉxxÉýeÉÉãwÉÉÿ: |
இந்த மந்திரத்தின் அர்த்தம்:
- உலகதிபதி, ஈஸ்வரன், ப்ரம்மா செல்வமளித்து காக்கட்டும். எங்கள் எண்ணத்தை ஈடேற செய்யட்டும்.
- ஓ ! தாதா ! இந்த உலகத்தை உருவாக்கியவரே, செல்வத்தையும் சந்ததியையும் அளிப்பீராக. அவர் இந்த கர்தாவிர்க்கு ஆண் சந்ததி அளிப்பாராக! அவருக்கு நான் நெய்யூடன் கூடிய ஹவிஸ் அற்பணிக்கின்றேன்.
- ஓ ! தாதா ! எங்களுக்கு சந்ததியும் புனித தன்மையும் தேவையான அளவு அளிப்பீராக. எங்கள் முன்னோர்களுக்கு அளித்த மாதிரி எங்களுக்கும் அளிப்பீராக. உங்கள் தயாளத்தை வேண்டி தியானிக்கிறோம். நீங்களே ஸத்யம்.
- ஓ ! தாதா ! நான் சந்ததியை விரும்பியதால் எனது மனைவிக்கு கர்பாதானம் செய்வித்தேன். நாங்கள் விரும்பியபடி எங்களுக்கு நற்சந்ததி அளிப்பீராக. என்றும் அழியா தேவர்கள் எங்கள் வீட்டில் இருந்து எங்களை காக்கட்டும்.
- rÉxiuÉÉþ ™ýSÉ MüÐýËUhÉÉý qÉlrÉþqÉÉýlÉÉãÅqÉþirÉïýÇ qÉirÉÉãïý eÉÉãWûþuÉÏÍqÉ | eÉÉiÉþuÉãSÉãý rÉzÉÉãþ AýxqÉÉxÉÑþ kÉåÌWû mÉëýeÉÉÍpÉþUalÉå AqÉ×iÉýiuÉqÉþzrÉÉqÉç|
- rÉxqÉæý iuÉóèxÉÑýM×üiÉãþ eÉÉiÉuÉãSý E sÉÉãýMüqÉþalÉå M×üýhÉuÉþxxrÉÉãýlÉqÉç | Aý͵ÉlÉýóèýxÉmÉÑý̧ÉhÉþÆuuÉÏýUuÉþliÉý…¡ûÉãqÉþliÉóèUýÌrɳÉþzÉiÉã xuÉýÎxiÉ |
- iuÉã xÉÑmÉÑþ§É zÉuÉýxÉÉåÅuÉ×þ§ÉýlMüÉqÉþMüÉiÉrÉ: | lÉ iuÉÉÍqÉýlSìÉÅÌiÉþ ËUcrÉiÉã |
- EýYjÉ EþYjÉåýxÉÉåqÉý ClSìÇþ qÉqÉÉS lÉÏýjÉålÉÏþjÉã qÉýbÉuÉÉþlÉóèxÉÑýiÉÉxÉþ: | rÉSÏóèþ xÉýoÉÉkÉþ: ÌmÉýiÉUý³É mÉÑý§ÉÉxxÉþqÉÉýlÉSþZwÉÉý AuÉþxÉãý WûuÉþliÉã |
இந்த மந்திரத்தின் அர்த்தம்:
5. ஓ! அக்னி பகவானே நிலையற்ற (அழிவுக்குரிய) நாங்கள் என்றும் அழியா உங்களை பிரார்திக்கிறோம். எங்களுக்கு மரணத்திலிரிந்து காக்கும் உணவை அளிப்பீராக. அவற்றை எங்கள் சந்ததியினரிடம் பகிர்ந்து உண்ணுவோம்
6. ஓ ! அக்னி பகவானே நீங்கள் நல்ல கர்மா செய்பவரை எப்பொழுதும் ஆதரிப்பீர். அதன் மூலம் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று குழந்தை (மற்றும் பேரன்)செல்வம் பெற்று வளமுடன் வாழ்வார்கள்
7. ஓ ! சக்திவாய்ந்த இந்திரரே. உங்களிடம் எல்லா ஐஸ்வர்யமும் உள்ளது. அதனால் நீரே பெரியவர்.
8. ஓ ! சக்திவாய்ந்த இந்திரரே , இந்த யஜமானர் அளிக்கும் சோம ரசம் உங்களை மகிழ்விக்கட்டும்.உங்கள் சக தேவதைகள் கூட உங்களை தந்தையாக பாவித்து அவர்கள் கஷ்ட நேரத்தில் அணுகுகிறார்கள்.
8. ஜயாதி ஹோமம்जयादि हॊम: எந்த ஒரு தேவதை நமக்கு வெற்றியை அளிக்கிறார்களோ அவர்கள் ஜயாதி தேவதைகள் என்று அழைக்கபடுகிறார்கள். அவர்கள் மொத்தம் 57. அவர்களில் சில, சித்தம், சித்தி, விஷ்ணு, அக்னி, கந்தர்வர், அதி அப்சரஸ், ப்ரம்மா, ப்ராஜாபதி, யஞ கந்தர்வர்கள்,நக்ஷத்ர அப்சரஸ், சந்த்ரம்மா கந்தர்வர், மனஸ் கந்தர்வர்கள், ரிக்ஸாம கந்தர்வர்கள், மிருத்ய கந்தர்வர்கள், ஒஷாதி அப்சரஸ் மேலும் பலர். நெய்யுடன் கூடிய ஆஹூதிகளை இந்த ஜயாதி தேவதைகளுக்கு விரும்பிய முடிவுக்காக இந்த கர்மா மூலம் காணிக்கையாக்குவர். ஆபஸ்தம்ப சூத்ர படலா 6 காண்ட 14, கண்டிக்கா 11& 12
११.अनवस्नातया कुमार्या दृषत्पुत्रॆ दृषत्पुत्रॆण पॆषयित्वा परिप्लाव्यापरॆणाग्निं प्राचीमुत्तानां निपात्यॊत्तरॆण यजुषाङ्गुष्ठॆन दक्षिणॆ नासिकाच्छिद्रॆऽपिनयति । १२. पुमांसं जनयति ।
9. ஷூங்ககர்மன் शुङ्गाकर्मन्: ஹோமம் முடிந்த பிறகு, சில கன்யாa குழந்தைகளிடம் ஆல மொக்கை / இலயை அம்மியில் அரைக்கும் படி சொல்ல வேண்டும். (நயக்ரோத/ஷுங்க் न्यग्रोध/शुङ्ग) இரண்டு பழம் கொண்ட ஆல மரத்தின் (கிழக்கு நோக்கி இருக்கும்) முளைபயிர் எடுத்து அதன் சாரை எடுக்க வேண்டும். ஒரு புதிய துணி அல்லது சேலையை மனைவிக்காக எடுத்து வைக்க வேண்டும். அவள் மேற்கு நோக்கி அமர வேண்டும். கணவன் கிழக்கு நோக்கி அமர வேண்டும். அவன் மனைவியின் தலையை மெதுவாக கிழக்கு நோக்கி திருப்பி அந்த புதிய துணி / சேலை நுனியில் ஆல பால் பிழிந்து தனது கட்டை விரலால் வலது மூக்கின் நுழைவில் ‘பும்ஸவனமசி’ என்று சொல்லி விடவேண்டும்.
mÉÑóèxÉÑuÉlÉqÉÍxÉ “pumsavanamasi”
அர்த்தம் – ஏ ! அலமரமே உன்னை ஆண் குழந்தை வேண்டி பிழிகிறேன்.
மனைவியிடம் அந்த பாலை நாசியின் மூலம் வீணடிக்காமல் தொண்டை வழியாக இழுக்க சொல்லவும்.
10. பிருகஸ்பதி சம்பாவனாबृहस्पति सम्भावना – வாத்யாருக்கும் மற்றும் இருக்கும் பிராஹ்மணர்களுக்கு திருப்தியாக பணமளித்து கௌரவிக்க வேண்டும்.
கஷ்யப முனிவர் பத்ம புராணத்தில் (ஸ்மிரிதி சந்த்ரிகையில் கூறப்பட்டுள்ளது) கற்பிணி பெண் எப்படி தன்னை நடத்தி கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்
गर्भिणीधर्मा:
கற்பிணி தர்மா:
- नावस्करॆषूपविशेन्मुसलॊलूखलादिषु ।
ஒரு கற்பிணி பெண் மாவுரலில், அம்மியில் அல்லது எந்த ஒரு கல் சாதனத்திலும் உட்காரக்கூடாது.
2. जलं च नावगाहॆत् शून्यागारं च वर्जयॆत् ॥
ஒரு கற்பிணி பெண் தண்ணீரில் முழுவதும் மூழக்கூடாது. என்றும் பழைய அழுக்கு வீட்டில் குடியிருக்க கூடாது.
3. वल्मीकं नाधितिष्ठेत न चॊद्विग्नमना भवेत् ।
ஒரு கற்பிணி பெண் பாம்பிருக்கும் வீட்டில் உட்காரக் கூடாது. அவள் என்றும் கவலை படக்கூடாது மேலும் பதற்றம் கொள்ள கூடாது.
4. विलिखेन्न नखैर्भूमिं नाङ्गरेण न भस्मना ॥
ஒரு கற்பிணி பெண் தன் நகம் கொண்டு தரையையோ அல்லது கரியையோ அல்லது சாம்பலையோ கீரக்கூடாது.
5. न शयालुस्सदा तिष्ठेद्व्यायां च विवर्जयेत् ।
ஒரு கற்பிணி மனைவி எப்பொழுதும் தூங்கி வழியக்கூடாது. கடின வேலைகளில் ஈடுபடக்கூடாது.
6. न तुषाङ्गारभस्मास्थिकपालॆषु समाविशेत् ॥
ஒரு கற்பிணி மனைவி தவிடிலோ, கரியிலோ, சாம்பலிலோ, எலும்பிலோ, மண்டை ஒட்டிலோ உட்காரக்கூடாது.
7. वर्जयेत्कलहं लौकैर्गात्रभङ्गं तथैव च ।
ஒரு கற்பிணி பெண் இருவரின் கருத்து வேறுபாட்டுக்கு காரணமாக இருக்க கூடாது.
8. न मुक्तकॆशी तिष्ठेत्तु नाशुचिस्स्यात्कदा चन ॥
ஒரு கற்பிணி பெண் தனது கூந்தலை அவிழ்த்து விட்டு இருக்க கூடாது. அவள் எப்பொழுதும் சுத்தமாக அழுக்கற்றவளாக இருத்தல் வேண்டும்.
9. न शयितॊत्तरशिर न चैवाधाश्शिरा: क्वचित् ।
ஒரு கற்பிணி பெண் வடக்கு திசையில் அல்லது வெற்று இடத்தில் தலை வைக்க கூடாது.
10. न वस्त्रहीना नॊद्विग्ना च चार्द्रचरणा सति ॥
ஒரு கற்பிணி பெண் ஆடையற்று இருத்தல் கூடாது. அவள் உணர்ச்சி வசப்பட்டவளாகவோ அல்லது கவலையுற்றவளாகவோ இருக்க கூடாது. அவள் ஈரக்காலுடன் படுக்கைக்கு செல்ல கூடாது.
11. नामङ्गल्यं वदेद्वाक्यं न च हास्यादिकं तथा ।
ஒரு கற்பிணி பெண் மங்கலமற்ற சொல் சொல்லக்கூடாது மேலும் சத்தம் போட்டு சிரிக்க கூடாது.
12. कुर्याच्छ्वशुरयॊर्नित्यं पूजां मङ्गलतत्परा ॥
ஒரு கற்பிணி பெண் தனது மாமனார் மற்றும் மாமியாரை வணங்குதல் வேண்டும். மேலும் மங்கள செயல்களை செய்தல் வேண்டும்.
13. तिष्ठेत्प्रसन्नवदना भर्तृप्रियहिते रता ।
ஒரு கற்பிணி பெண்ணிர்க்கு தெளிவான முகம் வேண்டும். அவளது கணவனிடம் பிரியமுடன் இருக்க வேண்டும் மேலும் அவன் விருப்பத்திற்கிணங்க இருக்க வேண்டும்.
14. सन्ध्यायां नैव भोक्तव्यं गर्भिण्या तु प्रयत्नत:। (மத்ஸ்ய புராணத்தில்)
ஒரு கற்பிணி மனைவி சந்தியா வேளைகளில் உணவு அருந்த கூடாது.
15. न स्नातव्यं गन्तव्यं वृक्षमूलॆषु सर्वदा ॥ (மத்ஸ்ய புராணத்தில்)
அவள் சந்தியா காலங்களில் குளிக்க கூடாது. எப்போதும் மரத்திற்க்கு அடியில் நிற்க கூடாது.
யாக்யவல்க்ய முனிவர் அவரது ஸ்ம்றுதியில் 3.79 அத்தியாயத்தில் எப்படி ஒரு கற்பிணி பெண் காத்து கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
दौहृदस्याप्रदानेन गर्भॊ दॊषमवाप्नुयात् ।
वैरूप्यं मरणं वापि तस्मात्कार्यं प्रियं स्त्रिया: ॥
ஒரு கற்பிணி மனைவியின் ஆசையை பூர்தி செய்ய வேண்டும். அல்லது பிறக்கும் குழந்தை தோஷத்துடனோ இறந்தோ பிறக்கும். அவளை ஆசையுடன் பேணி காக்க வேண்டும்.
இந்த சம்ஸ்க்காரம் ஆண் குழந்தை வேண்டி நடத்த படுகிறது. அதனால் இதை ஒரு கட்டாயமற்ற சம்ஸ்க்காரம் என்றும் சொல்லலாம். ஆபத்ஸம்பரின் கூற்றின் படி இந்த சம்ஸ்க்காரம் ஒருவருக்கு ஆண் வாரிசு வேண்டுமெனில் செய்யலாம். இதை ஒரு சடங்கு என்று பார்க்காமல் வேத வழியில் அறிவியல் பரிணாமமும் இருக்கிறது என்று பார்க்கலாம்.ஏன் ஆண் குழந்தை மட்டும் என்ற கேள்விக்கு கோத்திரத்தின் தொடர்ச்சிக்காக என்றும் பரம்பரையின் வழிக்காக என்றும் கொள்ளலாம். மேலும் உள்ள உட்கருத்திற்க்கு தங்கள் குருவிடமோ ஆச்சார்யரிடமோ கேட்டு தெரிந்து கொள்ளவும்.