Skip to content

Tuesday, 13th May 2025

Lost your password?

Please enter your username or email address. You will receive a link to reset your password via email.

Register
Forgot
Apple Store Google Play
  • தொடர்பு கொள்ள
  • நாள்காட்டி

Thought for the day

The greatest sin is to think yourself weak.
Swami Vivekananda

  • தொடர்பு கொள்ள
  • நாள்காட்டி
  • முகப்பு
  • ஸம்ஸ்காரம்
  • நித்ய கர்மா
  • இயற்கையுடன் ஆன்மீகம்
  • வேத வாழ்வில் எண்கள்
  • எங்களை பற்றி
  • தர்மத்தின் குரல்

Nitya KarmAs

1. abhivAdanam
2. ஆசமனம்
3. ப்ராணாயாமம்
4. ஸந்த்யாவந்தனம்
5. ஸமிதாதானம்
6. ப்ரஹ்ம யஜ்ஞம்
7. pitru tarpanam
8. உபாகர்மா
9. பரிஷேசனம்
10. காயத்ரீ ஜபம்
11. sankalpam

pitru tarpanam

pitru tarpanam


  • என்ன?

  • யார்?

  • ஏன்?

  • எப்பொழுது?

  • எப்படி?

  • எங்கு?

  • விலக்குகள்

  • தர்மம் பேசுகிறது

  • My pitru tarpanam

பித்ரு தர்ப்பணம் பஞ்ச மஹா யஞத்தின் (சம்ஸ்க்காரம் 23) பித்ரு யஞத்தின் கீழ் வருகிறது. பித்ரு தர்ப்பணம் என்பதற்க்கு பித்ருக்களை த்ருப்தி செய்வித்தல் என்று பொருள். எள்லாலும் தண்ணீராலும் இந்த யஞத்தை செய்ய வேண்டும். இது அவர்களை மகிழ்ச்சி மற்றும் உயர்ச்சி அடைய செய்யும் என்பது ஐதீகம்.

மனுஸ்ம்ரிதி 3.68 –

पञ्च सूना ग्रुहस्तस्य चुल्ली पॆषण्युपस्कर: |

कण्डनी च उदकुम्भश् च बध्यतॆ यास् तु वाहयन् ||

பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யுபஸ்கர|

கண்டனீ ச உதகும்பஶ் ச பத்யதே யாஸ் து வாஹயன்||

ஒவ்வொருவர் வீட்டிலும் ஐந்து படுகொலை களங்கள் உள்ளன. அவை அடுப்பாங்கரை, உலக்கை, துடைப்பம், காரை மற்றும் தண்ணீர் பாத்திரங்களாம். இதன் மூலம் எண்ணற்ற கண்ணிற்க்கு தெரியாத உயிரினங்கள் மாண்டு போகின்றன. இதனால் ஒருவனுக்கு எண்ணற்ற பாபங்கள் வந்து சேர்க்கின்றன. அதை ஈடு செய்ய தினமும் பஞ்ச மஹா யஞம் பரிந்துரைக்க பட்டுள்ளது.

 மனுஸ்ம்ரிதி 3.70—” पितृ यज्ञस्तु तर्पणं”—-பித்ரு யஞஸ்து தர்ப்பணம்

பித்ரு தர்ப்பணம் முன்னோர்களின் மூன்று தலைமுறையினருக்கு அவர்கள் உயர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் செய்யபடுகிறது. அவர்களை பித்ரு உலக தேவதைகளான வசு , ருத்ர, ஆதித்யர்களாக புக்னத்தில் வரித்து (எள்லாலும், தண்ணீராலும்) தர்ப்பணம் செய்யபடுகிறது. மந்திரத்தின் முடிவில் அர்ப்பணித்த தண்ணீர் அவர்கள் நிலைக்கேர்ப்ப அம்ருதமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாற்றிக்கொள்ளும் படி வேண்டிக்கொள்ளபடுகிறது (அவர்கள் தேவலோகத்திலோ, மனித ரூபத்திலோ அல்லது வேறு எந்த ரூபத்திலோ அவரவர்கள் கர்மாவை அனுசரித்து தற்சமயம் இருக்கக்கூடும்). அந்த உணவிர்க்கு “ஸ்வதா” என்று பெயர்.

விஷ்ணு புராணம் – 3.14 – ஸ்லோகம் 1 & 2 ஔர்வ முனிவர் கூறுவதாக அமைந்துள்ளது.

ब्रह्मॆन्द्ररुद्रनासत्यसूर्याग्निवसुमारुतान् विश्वॆदॆवान् पितृगणान्वयाम्सि मनुजान्पशून् ।

सरीसृपान् ऋषिगणान्यच्चान्यद्भूत सज्ञितम् श्राद्धम् श्रद्धान्वित: कुर्वन् प्रीणयत्यखिलम् जगत् |

“ப்ரஹ்மேன்த்ரருத்ரனாஸத்யஸூர்யாக்னிவஸுமாருதான்விஸ்வேதேவான் பித்ருகணன் வயாம்ஸிமனுஜான்பஶூன் |

ஸரீஸ்ருபன்ரிஶிகணான் யச்சான்யத்பூத ஸன்க்யிதம் ஶ்ராத்தம் ஶ்ரத்தான்வித: குர்வன் ப்ரீணயத்யகிலம் ஜகத் |”

 

எவனோருவன் ஸ்ராத்தம் சிரத்தையுடன் செய்கின்றானோ அவன் பிரஹ்மா, இந்திரன், ருத்ரன், அஸ்வினி குமாரன், சூரியன், விஸ்வேதேவர், பித்ரு கணங்கள், வசு கணங்கள், மருத் கணங்கள், ரிஷி கணங்கள், விலங்குகள்,பசுக்கள் மற்றும் எண்ணில்லா கண்ணிற்க்கு புலப்படாத உயிரினங்களை மகிழ்ச்சி அடைய செய்கிறான். அதன் மூலம் இந்த பிரபஞ்சத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறான்.

முன்பு மாத தர்பணங்களையும் முன்னோர்கள்  ஸ்ராத்தமாக செய்து வந்துள்ளார்கள். கால போக்கினால் நேரத்தை அனுசரித்து தீர்க்க தரிசிகள் இந்த நேரம் குறைந்த தர்ப்பண முறையை நமக்கு தந்தளித்துள்ளார்கள்.

பித்ரு தர்ப்பணம் ஐந்து பிரிவுகளாக கொள்ளபடுகிறது.

  1. பிரஹ்ம யஞ தர்ப்பணம் ( சம்ஸ்க்காரம் – 21 ) – ஸந்த்யாவந்தனம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய கர்மா.
  2. ஷண்ணவதி (96) தர்ப்பணம் – ஒரு வருஷத்தில் 96 முறை செய்ய வேண்டிய கர்மா.
  3. க்ரஹண தர்ப்பணம் – சூரிய / சந்திர க்ரஹண காலத்தில் செய்ய வேண்டிய கர்மா.
  4. பரேஹணீ தர்ப்பணம் – பெற்றோர்களின் ஸ்ராத்த தின மறுநாள் செய்ய வேண்டிய கர்மா.
  5. குண்ட குழி தர்ப்பணம் – பெற்றோர்கள் இறந்த சமயத்தில் (10 நாட்கள்) செய்ய வேண்டிய கர்மா.

இறந்த தந்தையின் புதல்வன் இறந்த ஒருவருடம் முடிந்தவுடன் பித்ரு தர்ப்பணம் செய்ய துடங்க வேண்டும்.

மகாபாரதம் ஆதி பர்வதம் 74.39 பின்வருமாறு கூறுகிறது.

पुन्नाम्नॊ नरकादयस्मात्पितरम् त्रायते सुत: ।

तस्मात्पुत्र इति प्रॊक्त: स्वयमॆव स्वयम्भुवा ॥

“புன்னாம்னோ நரகாதயஸ்மாத்பிதரம் த்ராயதெ ஸுத: |

தஸ்மாத்புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயமேவ ஸ்வயம்புவா ||”

புதல்வன் புத்ரன் என அழைக்கபடும் காரணம் அவன் அவர்களின் முன்னோர்களை புத் எனும் நரகத்தில் இருந்து காப்பதால் தான். அதனால் பிரமனே புதல்வனை புத்ரன் என்று அழைக்கிறான்

  1. மகாபாரதம் அனுஸாசன பர்வம் பிரிவு 145 கூறுகிறது:

धन्यम् यशस्यम् आयुश्यम् स्वर्गम् शत्रुविनाशनम् |

सन्तारकम् चेति श्राद्धमाहूर् मनीक्षिण: ||

தன்யம் யஶஸ்யம் ஆயுஶ்யம் ஸ்வர்கம் ஶத்ருவினாஶனம் |

ஸன்தாரகம் செதி ஶ்ராத்தமாஹூர் மனீக்ஶிண: ||”

ஸ்ராத்த தர்ப்பணம் செய்வதால் ஒருவன் செல்வம், புகழ், நீண்ட ஆயுள், சொர்க்கம், எதிரிகளின் அழிவு மற்றும் சந்ததி கிடைக்க பெறுகிறான்.

  1. விஷ்ணு புராணம் பாகம் 3 அத்யாயம் 14 ஸ்லோகம் 12 – 14

एता युगाद्या: कथिता: पुराणॆष्वनन्तपुण्यास्तिथश्चस्त्र:।

उपप्लवे चन्द्रमसो रवॆश्च त्रिष्वष्टकास्वप्ययनद्वयॆ च ॥

पानीयमप्यत्र तिलैर्विमिश्रं दद्यात्पितृभ्य प्रयतॊ मनुष्य:।

श्राद्धं क्रुतम् तॆन समासहस्रं रहस्यमॆतत्पितरॊ वदन्ति ॥

ஏதா யுகாத்யா: கதிதா: புராணே ஷ்வனன்தபுண்யாஸ்திதஶ்சஸ்த்ர:|

உபப்லவே சந்த்ரமசோ ரவேஶ்ச த்ரிஷ்வஷ்டகாஸ்வப்யயனத்வயே ச ||

பானீயமப்யத்ர திலைர்விமிஶ்ரம் தத்யாத்பித்றுப்ய ப்ரயதோ மனுஷ்ய:|

ஶ்ராத்தம் க்ருதம் தேன ஸமா ஸஹஸ்ரம் ரஹஸ்யமேதத்பிதரோ வதன்தி ||

யுகம் ஆரம்பித்த தினத்தில் செய்யும் தர்ப்பணம் முடிவில்லா புண்ணியத்தை தரும். சந்திர கிரஹணத்திலும் சூரிய கிரஹணத்திலும் திஸ்ரோஷ்டகத்திலும் பக்தியுடன் செய்யும் தர்ப்பணம் 1000 வருஷ பலன் என்பதை பித்ருக்கள் ரகஸ்யமாக சொல்கிறார்கள் 

பித்ருகணங்கள் என்பவர்கள் யார்?

மனுஸ்ம்ரீதி 3.192 :

अक्रॊधना: शौच-परा: सततम् ब्रह्मचारिणि: |

न्यस्त-शस्त्रा महा भागा पितर: पूर्वदॆवता: ||

“அக்ரோதனா: ஶௌச-பரா: ஸததம் ப்ரஹ்மசாரினி: |

ந்யஸ்த-ஶஸ்த்ரா மஹா பாகா பிதர: பூர்வதேவதா: ||”

பித்ருகணங்கள் எப்பொழுதும் கோபம் கொள்ளாத, தூய, பவித்ரமான, கலவரமில்லாத, மிகவும் அடக்கமான ஒருவித புராதனமான தேவதைகள்.

மனுஸ்ம்ரீதி 3.194

मनॊर् हैरण्यगर्भस्य यॆ मरीचि-अदय: सुता: |

तॆशाम् ऋषीणाम् सर्वॆशाम् पुत्रा: पितृगणा: स्मृता: ||

“மனோர் ஹைரண்யகர்பஸ்ய யே மரீசி-அதய: ஸுதா: |

தேஶாம் ரிஶீணாம் ஸர்வேஶாம் புத்ரா: பித்ருகணா: ஸ்ம்ருதா: ||” 

பித்ருகணங்கள் மரிச்சி, அத்ரி, பிருகு, புலஸ்த்ய போன்ற 10 மகாமுனிவர்களின் புதல்வர்களாம். இந்த மகாமுனிவர்கள் ஸ்வயம்பு மனுவின் புத்திரர்கள். ஸ்வயம்பு மனு தங்க கோளத்திலிருந்து தோன்றியவர். பித்ருகணங்கள் மிகவும் உயரிய ஆன்மீகம் நிறைந்த முன்னோர்கள் ஆவர். அவர்கள் புத்திசாலித்தனம் மிகுந்து பரலோக இன்பத்தை அனுபவித்து கொண்டு பிற ஆன்மாக்கள் வம்சம் உயருவதர்க்காக வேலை செய்பவர்கள். மேலும் பரமாத்மாவின் விருப்பத்திற்க்கு இணங்க படைத்து காத்து அழித்தல் வேலை செய்யும் குழுவில் பங்கேற்பவர்கள்.

பித்ருகணங்களில் பல பிரிவுகள் உள்ளன.

சோம, யம மேலும் காவ்யா மிகவும் உயர்ந்த பித்ரு கணங்கள். இவற்றில் சோமா (நிலவு) எல்லா பித்ருகளையும் குடியிருக்க செய்கிறது. யமா அவர்கள் செய்த நன்மை / பற்றுகளை தரம் அறிந்து முடிவு செய்கிறது. காவ்ய கணத்தின் பொறுப்பு பித்ருகளுக்காக அர்ப்பணித்த பிரசாதத்தை வாங்கி சுமந்து செல்வதுமாகும்.

இதை தவிர மிகவும் பிரபலமான 7 பித்ருகணங்கள் பின்வருமாறு (மனுஸ்ம்ரிதி 3.195 – 3.200) :

அமூர்த்தியா (உருவமற்ற கணங்கள்)

  1. வைராஜ – பிரஜாபதி குமாரர் வைராஜாஸ் சோமசத் என்று அழைக்க படுகிறார்கள். அவர்கள் சந்த்யையின் கணங்கள்.
  2. அக்னிஷ்வாதா – இந்த கணங்கள் மரீசி முனிவரின் புதல்வர்களாம்.இவர்கள் சோமபத உலகத்தில் வாழும் கணங்கள். இவர்கள் தேவர்கள் தியானிக்கும் மன நிறைவுகொண்ட ஆன்மிக உயரத்தை அடைந்த கணங்கள்.
  3. பார்ஹிஷத் – அத்ரி முனிவரின் புதல்வர்களான இவர்கள் தைத்யஸ், தானவஸ், யக்ஷாஸ், கந்தர்வர்கள், நாகர்கள், ராக்ஷசர்கள், சுபர்னர்கள், கின்னரர்கள் முதலியவர்களுக்கு கணங்கள். இவர்கள் விப்ரஜா உலகத்தில் வசிப்பவர்கள்.

மூர்திராஹித் (உருவமுள்ள கணங்கள்)

  1. ஸோமபா – ப்ரூகு முனிவரின் புதல்வர்களாகிய இவர்கள் பிராஹ்மண கணங்கள். இவர்கள் சுமாநஸ உலகத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் உலகின் படைத்தல் தொழிலில் பங்கேற்கிறார்கள்.
  2. ஹவிஷ்மத்- ஆங்கிரஸ முனிவரின் புதல்வர்களாகிய இவர்கள் ஷத்ரிய கணங்கள் . இவர்கள் ஹவிஷ்மன் உலகத்தில் வசிக்கிறார்கள்.
  3. ஆஜ்யப– புலஸ்த்ய முனிவரின் புதல்வர்களாகிய இவர்கள் வைஸ்ய கணங்கள்.
  4. ஸுகாலின் – வாஷிஷ்ட முனிவரின் புதல்வர்களாகிய இவர்கள் பிற வர்ணத்தாரின் கணங்கள்.

(மத்ஸ்ய வராக புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது)

அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்:

நமது முன்னோர்கள் (பித்ருக்கள்) பல வகையான கணங்களுடன் பித்ருலோகத்தில் வசிக்கிறார்கள். பித்ருலோகம் என்பது நமது கண்களுக்கு அப்பாற்பட்ட நிலவுபகுதியில் இருக்கிறது. இந்த கணங்கள் உயர்ந்த அறிவாற்றலோடும், ஆன்மிகத்தில் உயர்ந்தும் மன நிறைவுடன் வாழ்ந்து வருகிறார்கள்.பித்ருலோகம் சில சமயத்தில் சோமலோகம் என்றும் அழைக்க படுகிறது. மனிதர்களின் (பூஉலகின்) 30 நாட்கள் பித்ருலோகத்தில் 1 நாட்களாக கணக்கிட படுகிறது. நாம் மாதம் ஒருமுறை செய்யும் அமாவாசை தர்ப்பணம் அவர்களின் பகல் நேரமாகும். அப்போது நாம் தண்ணீரும் எள்ளும் அற்பணிக்கின்றோம்.

நமது முன்னோர்களின் ஆன்மிக வளர்ச்சியை பற்றி நமக்கு முழுவதும் அறிய வாய்ப்பு இல்லை. மேலும் அவர்களது இறப்பிற்க்கு பின் செல்லும் பாதை பற்றி நாம் அறியவும் முடியாது. ஆனால் அவர்களை இங்கு இருக்கும் பொழுதும், இறந்தவுடனும்  சந்தோஷத்துடன் வைத்துகொள்வது நமது கடமையாகும். அதற்க்கு தர்ப்பணம் ஒரு அறிய வாய்பாகும். வசு, ருத்ர ஆதித்ய தேவதைகள் நாம் அற்பணிக்கும் தர்பணத்தை அவர்களின் நுண்ணிய நிலையில் கொண்டு சேர்க்கும் உன்னத காரியத்தை செய்கின்றார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் ? எத்தனை நாட்கள் அங்கு வசிப்பார்கள்:

நமது முன்னோர்கள் இந்த லோகத்தில் அவர்களைவிட உயர்ந்த கணத்தை பூஜித்து வழிபட்டு வருவார்கள். அவர்கள் ஆன்மிக உயர்ச்சி அடையும் வரை இங்கு காத்திருப்பார்கள். பிறருக்கு செய்யும் நன்மை மூலம் மட்டுமே அவர்கள் அந்த உச்சத்தை அடைய முடியும். அவர்களுக்கு நாம் அற்பணிக்கும் எள்ளும் தண்ணீரும் சத்தாக சென்று அடைகிறது. அதனால் மகிழ்ச்சி அடையும் அவர்கள் தர்ப்பணம் செய்யும் கர்தாவிற்க்கு தனம், புகழ், நீண்ட ஆயுள், பரலோக பேரின்பம், எதிரியிடமிருந்து காப்பு, நல்ல சந்ததி ஆகியவைகளை பெற ஆசீர்வதிக்கிறார்கள்.

நாம் அற்பணிக்கும் தர்ப்பணம் அவர்கள் எந்த லோகத்தில் இருந்தாலும் சென்று அடையுமா?

 பின்வரும் மந்திர குறிப்பு அதை உறுதி செய்கிறது.

ऊर्झम् वहन्तीरम्रुतम् घ्रुतम् पय: कीलालम् परिश्रुतम् स्वधास्थ तर्पयत मॆ पित्रून् ।

 “ஊர்ஜம் வஹன்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஶ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன்”

 நாம் பித்ரு தேவதைகளாகிய வசு ருத்ர ஆதித்ய தேவதைகளை அவர்கள் எங்கு இருந்தாலும் சென்று அடைய பிரார்த்தித்து கொள்கிறோம். இந்த தேவதைகள் அதை அடைய செவிக்கின்றார்கள்.

# பித்ரு தர்ப்பணம் பின்வரும் நாட்களில் செய்தல் வேண்டும்.

  1. தினமும் – பிரஹ்மயஞம் (சம்ஸ்க்காரம் 21) ஸந்த்யாவந்தனம் முடிந்தவுடன் தேவரிஷிபித்ரு தர்ப்பணம் பகுதியில் வருகிறது.
  2. ஷண்ணவதி – 96 நாட்கள் (இதை நாங்கள் தனியாக எங்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளோம்) வருஷத்தில் குறிக்கபட்டுள்ளது. இதை முறையே ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், பிரஹ்மயஞம், மாத்யானிகம், பகவத் ஆராதனைக்கு பிறகு செய்தல் வேண்டும்.
  3. சந்திர சூரிய கிரஹணம் – சூரிய கிரஹணம் துடங்கியவுடன் குளித்து தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஆனால் சந்திர கிரஹணம் துவங்கியவுடன் குளித்து விட்டு கிரகணத்தின் கடைசி பாகத்தில் (கிரஹணம் முடியும் முன்) தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
  4. பரேஹணி தர்ப்பணம் – இதை பெற்றோர்களின் வருட ஸ்ரார்தத்தின் அடுத்த நாள் செய்தல் வேண்டும். இதை காலை ஸந்த்யாவந்தனம் முடித்து விட்டு செய்தல் வேண்டும்.

# ஸ்ரார்த்தம், தர்ப்பணம் பின்வரும் நேரத்தில் செய்தல் வேண்டும்

अह्णॊ मुहूर्ता विख्याता: दश पञ्च च सर्वदा ।

तत्र अष्टमॊ मुहूर्तॊ यह स काल: कुतप: स्मृता: ॥

அஹ்ணோ முஹூர்தா விக்யாதாஹ தஶ பன்ச ச ஸர்வதா |

தத்ர அஶ்டமோ முஹூர்தோ யஹ ஸ காலஹ குதபஹ ஸ்ம்ருதஹ ||

ஒரு நாளை  15 முஹுர்த்தமாக பிரித்துள்ளனர். இவற்றில் 8ஆவது முஹுர்தம் குதப நேரம் என்று பெயரிட்டுள்ளனர். இது நமது நேரத்தில் 11 மணியளவில் கொள்ளலாம்.  ஸ்ரார்த்தம், தர்ப்பணம் இந்த நேரத்தில் துவங்குவது சிறந்தது.

# ஷண்ணவதி தர்ப்பணம்

अमा युग मनुक्रान्ति धृति पात महाळया: |

अष्टका अन्वष्टका चॆति षण्णवत्य: प्रकीर्तिता: ।

அமா யுக மனுக்ரான்தி த்ருதி பாத மஹாளயா: |

அஶ்டகா அன்வஶ்டகா சேதி ஶண்ணவத்ய: ப்ரகீர்திதா:||

மேலே குறிப்பிட்ட ஸ்லோகம் ஷண்ணவதியை பற்றி வருகிறது. இன்றைய அவசர உலகத்தில் வருஷத்தில் 96 முறை செய்து வருவது பெரிய விஷயம். சிலர் இன்றும் இதை கடைபிடித்து வருகிறார்கள் என்ற செய்தியை அறியும் பொழுது அவர்கள் ஸ்ரத்தையின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. நமது பெரியோர்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இதை செய்யுமாறு செய்தி விடுத்துள்ளார்கள். முயன்று பாருங்கள்.

இவற்றில் அமாவாசை, சங்க்ரமணம், அஷ்டகா, அன்வஷ்டகா, மகாளய தர்பணத்தை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். இந்த பட்டியலில் கிரஹண தர்ப்பணம் வரவில்லை என்றாலும் (உங்கள் இடத்தில் அது தெரியும் பக்ஷத்தில்) அதையும் கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்.

பட்டியல்

 

முக்கிய வகைப்பாடு

துணை வகைப்பாடு

மொத்தம்

அமாவாசை

 

12

மாத பிறப்பு

 

12

மஹாளய தர்ப்பணம்

 

16

மன்வாதி

 

14

 

சித்திரை சுக்ல திருதியை

 

 

சித்திரை பௌர்ணமி

 

 

ஆனி பௌர்ணமி

 

 

ஆடி சுக்ல தசமி

 

 

ஆடி பௌர்ணமி

 

 

ஆவணி கிருஷ்ண அஷ்டமி

 

 

ஆவணி அமவாஸ்யை

 

 

புரட்டாசி சுக்ல திருதியை

 

 

ஐப்பசி சுக்ல நவமி

 

 

கார்த்திகை சுக்ல திவாதசி

 

 

கார்த்திகை பௌர்ணமி

 

 

தை சுக்ல ஏகாதசி

 

 

மாசி சுக்ல சப்தமி

 

 

பங்குனி பௌர்ணமி

 

திஸ்ரோஷ்டகா

 

12

 

மார்கழி கிருஷ்ண சப்தமி

 

 

மார்கழி கிருஷ்ண அஷ்டமி

 

 

மார்கழி கிருஷ்ண நவமி

 

 

தை கிருஷ்ண சப்தமி

 

 

தை கிருஷ்ண அஷ்டமி

 

 

தை கிருஷ்ண நவமி

 

 

மாசி கிருஷ்ண சப்தமி

 

 

மாசி கிருஷ்ண அஷ்டமி

 

 

மாசி கிருஷ்ண நவமி

 

 

பங்குனி கிருஷ்ண சப்தமி

 

 

பங்குனி கிருஷ்ண அஷ்டமி

 

 

பங்குனி கிருஷ்ண நவமி

12

உகாதி

 

4

 

க்ருத உகாதி – வைகாசி சுக்ல திருதியை

 

 

த்ரேதா உகாதி – கார்த்திகை சுக்ல நவமி

 

 

த்வாபர உகாதி – புரட்டாசி கிருஷ்ண திரயோதசி

 

 

கலியுக உகாதி – மாசி பௌர்ணமி

 

வ்யதீபாதம்

வ்யதீபாத யோக தினம்

13

வைத்ருதி

வைத்ருதி யோக தினம்

13

 

மொத்தம்

96

இந்த வருஷ ஷண்ணவதி அறிய காலண்டரை கிளிக் செய்யவும். மேலும் உங்கள் வகை தர்பண மந்திரத்தை அறிய “என் பித்ரு தர்ப்பணம்” பகுதியை அணுகவும்.

“என் சம்ஸ்க்காரம் “ பகுதியில் உள்ள “என் பித்ரு தர்ப்பணம்” உபபகுதியை பார்த்து முழுமையாக அறிந்துகொள்ளவும்.

  1. உங்கள் வர்ணம் குலம் மூதாதையர்களின் பெயரை “எடிட் சங்கல்பம்” பொத்தானை கிளிக் செய்து நிரப்பவும்.
  2. உங்கள் அப்பா வழி பெயர்களும் அம்மா வழி பெயர்களும் குறிப்பிட்ட பகுதியில் நிரப்பினால் உங்கள் வர்ண தர்ப்பண மந்திரங்களுடன் உங்களுக்கு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

  1. தர்பை (உங்கள் வாத்யாரிடம் பெற்றுக்கொள்ளலாம்)
  2. 4 புக்னம் ( 3 தர்பைபுல்லால் தயாரிக்க வேண்டும்). மஹாளய தர்பணத்திற்க்கு 6 புக்னம் (காருணிக பித்ருக்களுக்கும் சேர்த்து)
  3. பவித்ரம் (3 தர்பைபுல்லால் தயாரித்தது)
  4. எள்
  5. தண்ணீர்
  6. வெள்ளியிலோ தாமிரத்திலோ செம்பிலோ ஆன ஒரு தாம்பாளம்.
  7. என் பித்ரு தர்ப்பண மந்திரம்

பின்பற்ற வேண்டிய விதிகள்

  1. தர்ப்பணம் செய்யும் முன் ஒன்றும் சாப்பிடலாகாது. அன்று இரவும் அதன் முந்தின இரவும் பலாகாரம் (ஆகார நியமம் அறியவும்) செய்ய அனுமதி உண்டு.
  2. தர்ப்பண தினத்தன்று நனைத்து உலர்த்திய வேஷ்டியினால் செய்தல் உத்தமம் ( அது முடியவில்லை என்றால் முந்திய இரவு யார் மேலும் பட முடியாத இடத்தில் உலர்த்தி தர்ப்பண தினத்தன்று உபயோகபடுத்தி கொள்ளலாம்).
  3. எள்ளின் எண் (அளவு) ஒரு தர்பணத்திற்க்கு  – விஷ்ணு புராணம் 3.14.27

तिलैस्सप्ता अष्टभिर्वापि समवॆतम् जलाञ्जलिम् ।

भक्तिनम्र:स्समुद्दिष्य भुव्यस्माकम् प्रदास्यति ॥

  திலை ஸப்தா அஶ்டபிர்வாபி ஸமவேதம் ஜலான்ஜலிம் |

பக்தினம்ரஹ ஸமுத்திஶ்ய புவ்யஸ்மாகம் ப்ரதாஸ்யதி ||

 நம் மூதாதையர்கள் “பித்ரு கானம்” பாடிக்கொண்டு அவர்கள்     புதல்வர்கள் பக்தியுடன் 7 அல்லது 8 எள்ளினால் செய்யும் தர்பணத்திற்க்கு காத்து கொண்டிருக்கிறார்கள்.

 

நதியோரம் தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது. கிரஹண காலத்தில் கங்கை போன்ற புண்ணிய நதியில் தர்ப்பணம் செய்வது மிக உகந்தது. அது முடியவில்லை என்றால் வீட்டில் உள்ளேயேயோ அல்லது கொல்லையிலோ தர்ப்பணம் செய்யலாம்.

விலக்குகள்

  1. தர்ப்பண காலம் பொதுவாக 11 மணியளவில் செய்தல் நலம். ஆனால் இந்த அவசர அலுவல் வாழ்வில் 8.45 மணியளவில் செய்வது காலபோக்கில் ஒற்றுகொள்ள பட்டுள்ளது. விடிகாலை செய்வது பரேஹணி தர்ப்பணம் மட்டும் தான்.
  2. ஒரு தர்பணத்தை தவற விட்டால் அதற்க்கு ப்ராயச்சித்தம் எங்கும் குறிப்பிட படவில்லை. தாமதமாக செய்யலாம். தவற விடக்கூடாது. மன ஆறுதலுக்கு உண்ணா விரதம் மேற்கொள்ளலாம்.
  3. பித்ரு தர்ப்பண திதி வெள்ளியிலோ, செவ்வாயிலோ, ஞாயிரிலோ அல்லது ஒருவன் பிறந்த நக்ஷதிரத்திலோ வருமானால் அன்று அக்ஷதையும் எள்ளும் சேர்த்து தர்பணம் செய்யலாம்

भृगुवादित्यार वारॆषु पित्रु तृप्त्यै जलान्जलीन् ।

 स अक्षतान् सन्दिशॆत् धीमान् तत्तत् दर्शादिकॆ दिनॆ ॥

ப்ருக்வாதித்யார வாரேஷு பித்ரு த்ருப்த்யை ஜலான்ஜலீன் |

ஸ அக்ஷதான் ஸன்திஶேத் தீமான் தத்தத் தர்ஶாதிகே தினே ||

  1. பித்ரு தர்ப்பணம் ஏதாவது சுப கார்யம் ( கல்யாணம், சீமந்தம் போன்ற) முடிந்தவுடன் வந்தால் எள்ளிர்க்கு பதில் அக்ஷதையும் தர்பைக்கு பதிலாக அருகம் புல் உபயோக படுத்தவும். இவை திருமணம் என்றால் ஒரு வருஷத்திற்க்கும், உபநயனம் என்றால் 6 மாத காலமும், சௌளம் என்றால் 3 மாத காலமும் பயன் படுத்தவும்.

विवाहॆ चॊपनयनॆ चौळॆ सति यथाक्रमम् ।

वर्षमर्धम् तदर्धम् च नैत्यकॆ तिल तर्पणम् ॥

விவாஹே சோபனயனே சௌளே ஸதி யதாக்ரமம் |வர்ஷமர்தம் ததர்தம் ச னைத்யகே தில தர்பணம் ||

 

  1. தர்ப்பண காலம் பொதுவாக 11 மணியளவில் செய்தல் நலம். ஆனால் இந்த அவசர அலுவல் வாழ்வில் 8.45 மணியளவில் செய்வது காலபோக்கில் ஒற்றுகொள்ள பட்டுள்ளது. விடிகாலை செய்வது பரேஹணி தர்ப்பணம் மட்டும் தான்.
  2. ஒரு தர்பணத்தை தவற விட்டால் அதற்க்கு ப்ராயச்சித்தம் எங்கும் குறிப்பிட படவில்லை. தாமதமாக செய்யலாம். தவற விடக்கூடாது. மன ஆறுதலுக்கு உண்ணா விரதம் மேற்கொள்ளலாம்.
  3. பித்ரு தர்ப்பண திதி வெள்ளியிலோ, செவ்வாயிலோ, ஞாயிரிலோ அல்லது ஒருவன் பிறந்த நக்ஷதிரத்திலோ வருமானால் அன்று அக்ஷதையும் எள்ளும் சேர்த்து தர்பணம் செய்யலாம்

भृगुवादित्यार वारॆषु पित्रु तृप्त्यै जलान्जलीन् ।

      स अक्षतान् सन्दिशॆत् धीमान् तत्तत् दर्शादिकॆ दिनॆ ॥

      ப்ருக்வாதித்யார வாரேஷு பித்ரு த்ருப்த்யை ஜலான்ஜலீன் |

      ஸ அக்ஷதான் ஸன்திஶேத் தீமான் தத்தத் தர்ஶாதிகே தினே ||

 

  1. பித்ரு தர்ப்பணம் ஏதாவது சுப கார்யம் ( கல்யாணம், சீமந்தம் போன்ற) முடிந்தவுடன் வந்தால் எள்ளிர்க்கு பதில் அக்ஷதையும் தர்பைக்கு பதிலாக அருகம் புல் உபயோக படுத்தவும். இவை திருமணம் என்றால் ஒரு வருஷத்திற்க்கும், உபநயனம் என்றால் 6 மாத காலமும், சௌளம் என்றால் 3 மாத காலமும் பயன் படுத்தவும்.

 

      विवाहॆ चॊपनयनॆ चौळॆ सति यथाक्रमम् ।

      वर्षमर्धम् तदर्धम् च नैत्यकॆ तिल तर्पणम् ॥

      விவாஹே சோபனயனே சௌளே ஸதி யதாக்ரமம் |

      வர்ஷமர்தம் ததர்தம் ச னைத்யகே தில தர்பணம் ||

தைத்ரிய உபநிஷத் – க்ஷீக்ஷாவல்லி – 22 பின்வருமாறு கூறுகிறது

दॆवपितृकार्याभ्यां न प्रमदितव्यं मातृ दॆवॊ भव, पितृ दॆवॊ भव |

“தேவபித்ருகார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம், மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ |”

தேவ பித்ரு கணங்களை வழி படுதலை ஒருவன் மறக்கலாகாது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். (சேர்ந்து வணங்குதலின் முக்கியதுவத்தை அறியவும்)

நமது மரியாதையும் அன்பும் அவர்கள் இருக்கும் போதும் இறந்த போதும் இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் நம்மை ஆசீர்வதிக்க இருப்பதை மறக்கலாகாது.

ஒளிமயமான எதிர்காலத்திற்க்கு உதவும் ஆசீர்வாதம் பெறுவது ஒரு சுமையா? உங்கள் வருங்கால சந்ததியின் சந்தோஷம் பெற வைக்கும் ஒரு காரியம் ஒரு சுமையா? தர்மம் தலை காக்கும் .

 

Please Login, in order to view your pitru tarpanam. If not registered, then Register Here
a aa,A i ee,I  
अ आ इ ई  
u U,oo E ai  
उ ऊ ए ऐ  
O ou,ow,au Ru aha  
ओ औ ऋ :  
k kha g gha nga
क ख ग घ ङ
ch Ch ja jha ngya
च छ ज झ ञ
T Th D DH N
ट ठ ड ढ ण
t th d dh n
त थ द ध न
p f b bh m
प फ ब भ म
y r l v  
य र ल व  
sh SH s h  
श ष स ह  
kSha tra gya shra gM/gum
क्ष त्र ज्ञ श्र

óè