Tulasee
புனித துளசி பகவான் விஷ்ணுவின் மனம் உகந்த செடி. அவள் பகவானின் மிக பெரிய பக்தை. அவளை நாம் வ்ரிந்தா தேவி,வ்ருந்தாவனி, விஷ்வபூஜிதா, விஷ்வபாவனி, புஷ்பசாரா,நந்தினி, விஷ்ணுப்ரியா மேலும் கிருஷ்ணஜீவனி என்று பல பெயர்களால் அழைக்கிறோம். துளசியை நாம் பகவான் விஷ்ணுவிக்கும் அவரது அவதார ரூபங்களுக்கு மட்டுமே அற்பணிக்கிறோம்.
நான்கு இலைகளும் நடுவில் பூவும் (மஞ்சரி) கொண்டது ஒரு துளசி தளம்.
ஆண்கள் மட்டுமேதுளசி செடியிலிருந்து துளசி இலைகளை பறிக்கலாம்.
நமது ஸ்ம்ரிதிகள், புராணங்கள் மற்றும் ஆச்சார்யர்கள் ஏன் துளசியை கொண்டு பகவான் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
1.”ஸ்கந்த புராணம்” – வைஷ்ணவ காண்டம் 2, கார்த்திக மாஸ மஹாத்ம்யம், பாகம் – 8 துளசி மஹாத்ம்ய வர்ணநனையில்:
“ப⁴க்த்யா ஸம்பூஜிதோ நித்யம் துளஸ்யாஸ்து த³லார்வத:
ஸ்வயம் ப்ரத்யக்ஶ மாயதி ப³கவான் ஹரிரீஷ்வர:”
தினமும் பக்தியுடன் துளசி தளத்தால் பூஜிப்பவற்க்கு பகவான் ஹரி காட்சி அளிப்பார்.
- புண்டரீக முனிவரின் துளசி ஸ்தோத்ரத்தில் :
துளஸ்ய ரக்ஶதாம் ஸர்வம் ஜகதே தத் சராசரம் |
யா வினிர்ஹந்தி பாபானி திருஷ்ட்வா பாபிபி⁴ர் நரைஹி ||
துளசி அசையும் பொருளையும் அசையாபொருளையும் காக்கிறது. ஒரு மஹாபாபி துளசியியை பார்த்த ஷணத்கிலேயே,அவன் பாபங்கள் அழிந்துவிடுகின்றது.
3.ஸ்ரீ தியாகராஜ பாகவதர் மாயா மாளவகௌளை ராகத்தில் பாடிய:
”துளசி தள மூலசே சந்தோஷ முகா பூஜிந்து:
அவர் பகவான் ராமரை தினமும் துளசி தளங்களை கொண்டு மகிழ்ச்சியுடன் பூஜிக்க வேண்டுகிறார்.
- துளசியை காலையில் – மதியம் 12 மணிக்குள் பறிக்கவேண்டும்.
- தினமும் காலையில் தண்ணீர் ஊற்றி வணங்க வேண்டும்.
- புனிதமான துளசியை பறிப்பதற்க்கு முன் கை கால்களை சுத்தம் செய்து ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைசொல்லிக்கொண்டு பறிக்கவேண்டும்.
“துளசிஅம்ருத ஜன்மாஸி ஸதா த்வம் கேஶவப்ரியே,
கேஶவார்தம் லுனாமித்வம் வரதா பவ ஶோபனே ||
- இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு உங்கள் வீட்டு சொந்த துளசி செடியிலிருந்து தாங்களே துளசி தளங்களை பறிக்கவேண்டும்.
- கடன் வாங்கப்பட்ட துளசியோ அல்லது பொதுவான தோட்டங்களில்/ கோவில்களில் பறிப்பதோ அல்லது விலைக்குவாங்குவதோ கூடாது.
- துளசியின் தண்டை இடது கையால் மிருதுவாக பிடித்துக்கொண்டு வலது கை விரல்களால் பறித்து ஒரு இலையிலோ தாம்பாளத்திலோ சேர்க்கவேண்டும். இடது கையில் சேர்க்க கூடாது.
- விரல் நகம் துளசியில் படாத வாறு கவனமாக பறிக்க வேண்டும்.
- துளசிதளம் கிடைக்காவிட்டால் அதன் இலைகளோ அல்லது தண்டோ பகவான் விஷ்ணுவிற்கு சமர்ப்பிக்கலாம்.
1.பெண்கள் துளசி பறிக்ககூடாது. அவர்கள் தண்ணீர் மட்டும்ஊற்றலாம். அவர்கள் முறைப்படி துளசி பூஜையோ, துளசி விவாஹ பூஜையோசெய்யலாம்.
2.துளசி எப்போதும் பழமை அடைவதில்லை. பறித்து வைத்து பாதுகாக்கலாம்.
- துளசி இலைகளை பின்வரும் நாட்களில் பறிக்க கூடாது:
- செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றிக்கிழமை
- மாசப்பிறப்பு/ வருஷப்பிறப்பு ஆகிய சங்க்ரமண/யுகாதிகள்.
- அமாவாஸ்யை
- பௌர்ணமி
- த்³வாத³சி
- ஸ்ராத்³த⁴தினம்
- துளசி இலைகளை பிற்பகல் 12.00மணிக்கு பிறகு பறிக்க கூடாது. பகவானின் தலையை கொய்த பாபம் உண்டாகும்.
- துளசி ஏகாதசி அன்று உட்கொள்ள கூடாது. பகவானுக்கு அன்று அற்பணித்து அடுத்த நாள் த்வாதசி அன்று பிரசாதமாக ஸ்வீகரிக்க வேண்டும்.
துளசியின் தாவிரயிலல் பெயர் “ஓசிமம் டெநுய்ப்லுரம்”. உலகம் முழுவதும் வளரும் செடி இது. இது “ஹோலி பேசில் “ என்று உலகளவில் அறியப்படுகிறது. இதில் மிக பெரிய மருந்து தன்மை அடங்கி உள்ளது. அதன் குணம் பாக்டீரியாவை எதிர்ப்பதிலும், பூஞ்சைகாளானை எதிர்ப்பதிலும் பிராண வாயுவை பெருக்குவதிலும் மற்றும் சளி,இருமல் ஆகியவற்றை போக்குவதிலும் உபயோக படுகிறது.
வீட்டில் ஒரு துளசி செடிவளருங்கள். நல்ல தண்ணீர் தினமும் காலையில் ஊற்றி புனிதமான துளசியால் ஸ்ரீ ஹரியை பூஜியுங்கள்.
இது உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை சுத்திகரிக்கும்.
மனதை கவரும் இந்த அழகானதுளஸீ ஸ்தோத்ரத்தை படிக்கவும்.
ஸ்ரீமத் துளஸீ அம்மா, திருவே கல்யாணி அம்மா, வெள்ளிக்கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே,
செவ்வாய்க்கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே, தாயே! உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்.
பச்சை பசுமையுள்ள துளஸீ நமஸ்தே, பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே,
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே, அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே,
ஹரியுடய தேவி அழகி நமஸ்தே, அடைந்தார்க்குஇன்பம் அளிப்பாய் நமஸ்தே,
வனமாலீ என்னும் மருவே நமஸ்தே, வைகுண்ட வாசியுடன்மகிழ்வாய் நமஸ்தே!
அன்புடனே நல்ல அரும் துளஸீ கொண்டு வந்து, மண்ணின்மேல் நட்டு,
மகிழ்ந்து நல்ல நீரூற்றி, முற்றத்தில் தான் வளர்த்து,முத்துப்போல் கோலமிட்டு,
செங்காவி சுற்றும் இட்டு, திருவிள்ளக்கும் ஏற்றி வைத்து,பழங்களுடன்தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து,
புஷ்பங்களை கொண்டு பூஜித்த பேர்களுக்கு என்ன பயன் என்று ஹ்ரிஷீகேசர் தான் கேட்க,
மங்களமான துளஸீ மகிழ்ந்துரைத்தாள் :
“மங்களமாய் என்னை வைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்களுக்கு தீவினையை போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்.
அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஷ்வர்யம்நான் அளிப்பேன்.
தரித்திரத்தை நீக்கி செல்வத்தை நான் கொடுப்பேன்.
புத்திரனில்லாதவர்க்கு புத்திர பாக்யம் அளிப்பேன்.
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்ல கணவரை கூட்டுவிப்பேன்.
கிருஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழ வைப்பேன்.
முமுக்ஷுக்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்.
கோடி காராம் பசுவை கன்றுடனே கொண்டு வந்து கொம்புக்கு பொன் அமைத்து,
குளம்புக்கு வெள்ளி கட்டி,கங்கை கரை தனிலே கிரஹண புண்ய காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு மஹா தானம் செய்த பலன் நான் அளிப்பேன்.
“சத்தியம்”! என்று நாயகியும் சொல்லலுமே,“அப்படியே ஆகட்டும்” என்று திருமால் அறிக்கையிட்டார்.
இப்படியே அன்புடனே ஏற்றி தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார் பரதேவி தன்னருளால்.
முயற்சி செய்து தான் பாருங்களேன்!
tulasee is botanically called Ocimum tenuiflorum. It is grows all over the world and is known as Holy Basil world wide. It has great medicinal properties like anti-bacterial, anti-fungal, anti-oxidatant, anti-inflammatory and expectorant properties.
Bring home a tulasee plant, water the tulasee plant daily and offer tulasee dalAs to Shri Hari and consume it as prasAd. It purifies the body, mind and the soul.
Read through this beautiful tulasee shloka in tamizh.