List of Samskaaras
ஸ்மார்த்த கர்மா
பஞ்ச மஹா யக்ஞம் - 5
ஸப்த பாக யக்ஞம் - 7
ச்ரௌத கர்மா
ஸப்த ஸோம யக்ஞம் - 7
ஸப்த ஹவிர் யக்ஞ - 7
pooja
பித்ரு தர்ப்பணம் பஞ்ச மஹா யஞத்தின் (சம்ஸ்க்காரம் 23) கீழ் வரும் பித்ரு யஞத்தின் கீழ் வருகிறது.
பித்ரு தர்ப்பணம் என்பதற்க்கு பித்ருக்களை த்ருப்தி செய்வித்தல் என்று பொருள். எள்லாலும் தண்ணீராலும் இந்த யஞத்தை செய்ய வேண்டும். இது அவர்களை மகிழ்ச்சி மற்றும் உயர்ச்சி அடைய செய்யும் என்பது ஐதீகம்.
மனுஸ்ம்ரிதி 3.68 –
पञ्चसूना ग्रुहस्तस्य चुल्ली पॆषण्युपस्कर: |
कण्डनी च उदकुम्भश् च बध्यतॆ यास् तु वाहयन् ||
பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யுபஸ்கர|
கண்டனீ ச உதகும்பஶ் ச பத்யதே யாஸ் து வாஹயன்||
தந்தை இறந்த ஒருவருடம் முடிந்தவுடன் புதல்வன் பித்ரு தர்ப்பணம் செய்ய துடங்க வேண்டும்.
மகாபாரதம் ஆதி பர்வதம் 74.39 பின்வருமாறு கூறுகிறது.
पुन्नाम्नॊ नरकादयस्मात्पितरम् त्रायते सुत: ।
तस्मात्पुत्र इति प्रॊक्त: स्वयमॆव स्वयम्भुवा ॥
“புன்னாம்னோ நரகாதயஸ்மாத்பிதரம் த்ராயதெ ஸுத: |
தஸ்மாத்புத்ர இதி ப்ரோக்த: ஸ்வயமேவஸ்வயம்புவா ||”
புதல்வன் புத்ரன் என அழைக்கபடும் காரணம் அவன் அவர்களின் முன்னோர்களை புத் எனும் நரகத்தில் இருந்து காப்பதால் தான். அதனால் பிரமனே புதல்வனை புத்ரன் என்று அழைக்கிறான்
. மகாபாரதம் அனுஸாசன பர்வம் பிரிவு 145 கூறுகிறது:
धन्यम् यशस्यम् आयुश्यम् स्वर्गम् शत्रुविनाशनम् |
सन्तारकम् चेति श्राद्धमाहूर् मनीक्षिण: ||
தன்யம் யஶஸ்யம் ஆயுஶ்யம் ஸ்வர்கம் ஶத்ருவினாஶனம் |
ஸன்தாரகம் செதி ஶ்ராத்தமாஹூர் மனீக்ஶிண: ||”
ஸ்ராத்த தர்ப்பணம் செய்வதால் ஒருவன் செல்வம்,புகழ்,நீண்ட ஆயுள்,சொர்க்கம்,எதிரிகளின் அழிவு மற்றும் சந்ததி கிடைக்க பெறுகிறான்.
2. விஷ்ணு புராணம் பாகம் 3 அத்யாயம் 14 ஸ்லோகம் 12 – 14
एता युगाद्या: कथिता: पुराणॆष्वनन्तपुण्यास्तिथश्चस्त्र:।
उपप्लवे चन्द्रमसो रवॆश्च त्रिष्वष्टकास्वप्ययनद्वयॆ च ॥
पानीयमप्यत्र तिलैर्विमिश्रं दद्यात्पितृभ्य प्रयतॊ मनुष्य:।
श्राद्धं क्रुतम् तॆन समासहस्रं रहस्यमॆतत्पितरॊ वदन्ति ॥
ஏதா யுகாத்யா: கதிதா: புராணே ஷ்வனன்தபுண்யாஸ்திதஶ்சஸ்த்ர:|
உபப்லவே சந்த்ரமசோ ரவேஶ்ச த்ரிஷ்வஷ்டகாஸ்வப்யயனத்வயே ச||
பானீயமப்யத்ர திலைர்விமிஶ்ரம் தத்யாத்பித்றுப்ய ப்ரயதோ மனுஷ்ய:|
ஶ்ராத்தம் க்ருதம் தேன ஸமா ஸஹஸ்ரம் ரஹஸ்யமேதத்பிதரோ வதன்தி||
#பித்ரு தர்ப்பணம் பின்வரும் நாட்களில் செய்தல் வேண்டும்.
1. தினமும் – பிரஹ்மயஞம் (சம்ஸ்க்காரம் 21) ஸந்த்யாவந்தனம் முடிந்தவுடன் தேவரிஷிபித்ரு தர்ப்பணம் பகுதியில் வருகிறது.
2. ஷண்ணவதி – 96 நாட்கள் (இதை நாங்கள் தனியாக எங்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளோம்) வருஷத்தில் குறிக்கபட்டுள்ளது. இதை முறையே ஸ்நானம்,ஸந்த்யாவந்தனம்,பிரஹ்மயஞம்,மாத்யானிகம்,பகவத் ஆராதனைக்கு பிறகு செய்தல் வேண்டும்.
3. சந்திர சூரிய கிரஹணம் – சூரிய கிரஹணம் துடங்கியவுடன் குளித்து தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஆனால் சந்திர கிரஹணம் துவங்கியவுடன் குளித்து விட்டு கிரகணத்தின் கடைசி பாகத்தில் (கிரஹணம் முடியும் முன்) தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
4. பரேஹணி தர்ப்பணம் – இதை பெற்றோர்களின் வருட ஸ்ரார்தத்தின் அடுத்த நாள் செய்தல் வேண்டும். இதை காலை ஸந்த்யாவந்தனம் முடித்து விட்டு செய்தல் வேண்டும்.