Thursday, 13th December 2018

நித்ய கர்மா

நித்ய கர்மா ஒவ்வொரு கர்தாவையும் விடியலிருந்து இரவு வரை கட்டுபடுத்துகிற கட்டாய கர்மா ஆகும். அதை ஆஹ்நிகம் आह्निकम् என்றும் அழைப்பர். எந்த ஒரு சம்ஸ்க்காரம் நடை பெருவதற்க்கு முன் குறிப்பிட்ட நேரத்தில் நித்ய கர்மா செய்வது ஒரு முன் நிபந்தனையாக கூற பட்டுள்ளது. இதை தவிர சில கர்மாக்கள் வருடத்தில் சில நாட்களில் செய்ய பட வேண்டும் என்று கூற பட்டுள்ளது. அவற்றை கீழே சுருக்கி கொடுத்துள்ளோம்.

 

1.  நித்ய கர்மா नित्य कर्म

* ஆன்றாட கட்டாய கர்மாக்கள் ஸ்நானம், ஆசமனம், திரிகால ஸந்த்யா வந்தனம், தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம், ஔபாசனம், தேவ அர்ச்சனம் / பகவத் ஆராதனம், வைஸ்வதேவம், அதிதி போஜனம் போன்றவைகளாம். இவைகளை தினமும் செய்தல் வேண்டும்.

* கர்மாக்களான அமாவாசை தர்ப்பணம், ஸங்க்ரமன தர்ப்பணம் போன்றவைகளை அந்தந்த தினங்களில் செய்தல் வேண்டும்.  

 

2.  நைமித்திக கர்மா नैमित्तिक कर्म

ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை சார்ந்து நடக்கும் கர்மாவிர்க்கு நைமித்திக கர்மா என்று பெயர். உதாரணத்திர்க்கு பண்டிகை காலங்களில் (ராம கிருஷ்ண ஜெயந்தி)நடக்கும் பகவத் ஆராதனம், கிருஹணத்தில் நடக்கும் தர்ப்பணம்,பிறப்பு இறப்பு காலங்களில் நடக்கும் கர்மாக்கள்  போன்றவைகளாம். நித்ய நைமித்திக கர்மாக்கள் எல்லா சம்ஸ்க்காரம் முக்கிய மாக பஞ்ச மஹா யஞங்கள் (சம்ஸ்க்காரம் 21 – 25)  நடக்க உதவ வடிவமைக்க பட்டுள்ளது.

 

3. காம்ய கர்மா  काम्य कर्म               

        எந்த ஒரு கர்மா ஒரு குறிப்பிட்ட பலனுக்காக வேண்டி நடத்த படுகிறதோ (விஷேஷ யஞங்கள்) அவை காம்ய கர்மாவாகும்.