Wednesday, 19th June 2019

சம்ஸ்கார பட்டியல்

சம்ஸ்க்காரம் - முழுமையான வாழ்கை

முன்பே குறிப்பிட்டபடி சம்ஸ்க்காரம் என்பது (அக) சுத்திகரிப்பு என்று பொருள். ஆனால் பொதுவாக சம்ஸ்க்காரம் என்ற வார்த்தை மன உணர்வை குறிப்பதற்கோ அல்லது கலாசாரத்தை குறிப்பதற்கோ பயன்படுகிறது. இந்த நினைவின் உணர்வு நம்மை சிந்தனை செய்யவும் செயலாற்றவும் அதன் மூலம் அடையவும் உந்துகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மனம் போன போக்கில் செயல் புரியும் சுதந்திரம் இருக்கும் போதிலும் அவன் தன் குழந்தைக்கும் ஸமூகத்திற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறக்கலாகாது. இப்படி ஒரு வீட்டின் தரம் உயரும் பொழுது சமூகத்தின் தரமும் உயருகிறது.

முனிவர்கள் பலர் வேத வழியை ஒட்டி தர்ம சாஸ்த்ரமும் (ஸ்ம்ரிதிகளின் சேகரிப்பு) புராணமும் நமக்கு அளித்து ஒரு முழு வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருந்த்துள்ளனர்.

சம்ஸ்க்காரம் என்பது இந்த விலைமதிக்க முடியாத நூல்களின் சாரமேயாகும். இந்த சுலபமான தூய்மை வாய்ந்த சடங்குகளை ஒவ்வொரு மனிதனின் கடமையாக வடித்துளார்கள். இதை செய்வதன் மூலம் ஒருவனின் உள்ளம் தூய்மையாகி அசைக்கமுடியாத நல்ல விஷயத்தை அனுபவித்து அதன் மூலம் ஆத்ம பலத்தை அடைகிறான்.

நாங்கள் இங்கே 46 சம்ஸ்க்காரங்கள் பட்டியலிட்டுள்ளோம். எல்லா சிந்தனை  பள்ளிகளின் சம்ஸ்க்காரத்தை ஒருங்கே கொடுத்துள்ளோம். எண்களும் வகைப்பாடும் சில இடங்களில்  வித்தியாசபடலாம். ஆனால் அந்த வித்தியாசத்தை பகுப்பாய்வு செய்வது உகந்தது.

1.   முதல் 20 சம்ஸ்க்காரங்களும் 5 பஞ்சமஹா யஞகளும்,7 பாக யஞகளும் (மொத்தம் 32) ஸ்மார்த கர்மா என்று அழைக்கபடுகிறது. இது விவாக சம்ஸ்க்காரத்தின் பொழுது ஜ்வலிக்க செய்யபட்ட அக்னியிலேதான் செய்ய படுகின்றது. (இது பரவலாக நடைமுறையில் இல்லை என்றாலும் இன்றும் சில உத்தம ஆத்மாக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்). மேலும் இந்த அக்னி க்ருஹத்தில் வளர்க்கப்படுவதால் க்ருஹ்ய அக்னி என்றும் ஔபாசன அக்னி என்றும் ஏகாக்னி என்றும் அழைக்க படுகிறது. பெரும்பாலும் வீட்டில் இந்த கர்மா செய்யபடுவதால் இதை க்ருஹ்ய கர்மா என்றழைக்கிறார்கள்.  ஸ்மார்த கர்மா வீட்டு தலைவருக்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட கர்மாவாகும். இதன் விளக்கம் மற்றும் செயல்முறை க்ருஹ்ய சூத்திரத்திலும் ஸ்மிருதியிலும் குறிப்பிட பட்டுள்ளது. சில க்ருஹ்ய சூத்ரம் ஸ்ரௌத கர்மாவையும் விளக்கியுள்ளது.

2.   கடைசி 7 ஹவிர் யக்ஞமும் 7 சோம யக்ஞமும் (மொத்தம் 14) ச்ரௌத கர்மா என்றழைக்க படுகிறது. இவை மூன்று அக்னியால் செய்யப்படுகிறது (முறையே கார்ஹபத்ய அக்னி,ஆஹவநீய அக்னி,தக்ஷிணாக்னி). ஸ்ரௌத கர்மா விரிவாக செய்ய படும் கர்மா. சில சமயத்தில் வீட்டிலும் சில சமயத்தில் பெரிய அளவில் விஷேஷமான யாகசாலையில் செய்ய படுகிறது. இது மனித இனத்தின் பொது நன்மைக்காக செய்யபடுகிறது. இதன் விளக்கம் மற்றும் செயல்முறை ஸ்ரௌத கல்ப சூத்திரத்தில் குறிப்பிட பட்டுள்ளது.

ஸ்மிருதி முறைப்படி செல்வோமேயானால் ஒருவன் 40 சம்ஸ்க்காரங்கள் செய்தல் வேண்டும் மற்றும் 8 ஆத்ம குணங்கள் கொண்டிருக்க வேண்டும்.

கௌதம முனிவர் தனது தர்ம சாஸ்திரத்தில் ( அத்தியாயம் 8) சம்ஸ்காரத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

 

गर्भाधानपुंसवनसीमन्तॊन्नयनजातकर्मनामकरणन्नप्राशनचौडॊपनयनं चत्वारि वॆदव्रतानि स्नानं सहदर्म्मचारिणॊ सम्यॊग: पञ्चानां यज्ञानामनुष्ठानं दॆव पितृ मनुष्य भूत ब्रह्मणामॆतॆषाञ्चाष्टका पार्वणश्राद्ध श्रावण्याग्रहायणी चैत्राश्वयुजीति  सप्त पाकयज्ञसंस्था अग्न्याधॆयमग्निहॊत्र दर्शपौर्णमासावग्रहणं चातुर्म्मास्यनिरूढपशुबन्ध श्रॊत्रामणीति सप्त हविर्यज्ञसंस्थां अग्निष्तॊमॊऽत्यग्निष्टोम उक्थ: षॊडशि वाजपॆयऽतिरात्रॊप्तॊर्य्याम इति सप्त सॊमसंस्था इत्यतॆ चत्वारिंशत् संस्कारा: ।                                                                                                                             अथाष्टावात्मगुणा: दया सर्वभूतॆषु क्षान्तिरनसूया । शौचमनायासॊमङ्गलमकार्पण्यं स्पृहॆति |                                   यस्य तु खलु संस्काराणामॆकदॆशॊऽप्यष्टावात्मगुणा अथ स ब्रह्मण: सायुज्यं सालॊक्यञ्च गच्छति गच्छति ।                                                                                                                                                                                                                                                                                                                                                               -----                                                                                                                                                                       गौतम धर्मशास्त्रम्, अष्टमोऽध्याय: , सस्कारवर्णनम्                     

 

40 சம்ஸ்க்காரங்கள்

1. கர்பாதானம் 2. பும்ஸுவனம் 3. சீமந்தோநயனம் 4. ஜாதகர்மா 5. நாமகரணம் 6. அன்ன ப்ராஸநம் 7. சௌளம் 8. உபநயனம், 4 வேத விரதம் - 9. ப்ராஜாபத்யம் 10. சௌம்யம் 11. ஆக்நேயம் 12. வைஸ்வதேவம் 13. ஸ்நானம் 14. விவாஹம், 5 பஞ்சமகாயஞங்கள் - 15. பிரம்ம யஞம் 16. தேவ யஞம் 17. பித்ரு யஞம் 18. பூத யஞம் 19. மனுஷ்ய யஞம், 7 பாக யஞம் - 20. அஷ்டகா 21. பார்வணி 22. ஸ்தாலிபாகா 23. ஷ்ராவணி / ஸர்ப பலி 24. ஆக்ரஹாயணீ 25. சைத்ரீ26. ஆஷ்வாயுஜீ, 7 ஹவீர் யஞம் - 27. அக்னியாதான் 28. அக்னிஹோத்ர 29. தர்ஷபூர்ணமாச 30. ஆக்ரஹாயணம் 31. சாதுர்மாஸ்யம் 32. நிரூடபஷுபந்தஅக்னிஷ்டோமம் 33. சௌத்ராமணீ, 7 சோம யஞம் - 34.  அக்னிஷ்டோமம் 35. அத்யகினிஷ்ட்டோமம் 36. உக்த்யம் 37. ஷோடசீ 38. வாஜபேயம் 39. அப்தோர்யாமம் 40. அதிராத்ரம் 
 
8 ஆத்ம குணங்கள்

1.   தயா சர்வபூதேஷு - உயிரினங்கள் அனைத்தின் மேலும் இரக்கம் செலுத்துதல்

2.   சாந்தி - அமைதி / பொறுமை

3.   அனசூயம் -  பொறாமையின்மை

4.   ஷௌச்சம் - மனத்தூய்மை

5.   அனாயாசம் - தன்னை / பிறரை துன்புறுத்தாமை. மகிழ்ச்சியான நிலை .

6.   மங்களம் - மங்களகரம்

7.   அகார்பண்யம் - தயாள குணம்.

8.   அஸ்ப்ருகம் - ஆசையின்மை

எவன் ஒருவன் பெரும்பாலான 40 சம்ஸ்க்காரம் 8 ஆத்ம குணத்தோடு செய்கிறானோ அவன் “ஸாலோக்யம்” அடையப்பெறுகிறான். 

 

 

  

Comments   

 
#3 பாலாஜி 2014-11-30 21:45
அருமை
 
 
#2 Samskaaram.com 2014-09-10 14:54
Welcome shri moorthy,
Yes. We shall upload it shortly and notify you. Thank you for your participation.
 
 
#1 MOORTHY 2014-09-09 22:16
please upload rig veda sandyavandanam in tamil. I see only hindi or sanskrit script only in your page. thankyou